ஜிம் ஒர்க் அவுட் விடியோவை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்.! மூச்சிரைத்த ரசிகர்கள்.!

By Rajkumar · 11/9/2019

புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியாபவானி ஷங்கர் . பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக கார்த்திக் நடித்த “கடைக்குட்டி” சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் கமிட் ஆகிவரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல அருண் விஜய் நடித்து வரும் மாபியா படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : ரகசியமாக நடந்து முடிந்த ஆல்யா மானஸா – சஞ்சீவ் திருமணம்.! பிரபல நடிகர் பதிவிட்ட புகைப்படம்.! ரசிகர்கள் ஷாக்.!

பிரியா பவானி சங்கரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கவினும் காதலித்து பிரிந்துவிட்டதாக ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், இது குறித்து பிரியா பவானி சங்கர் எதுவும் வாய் திறக்கவில்லை. மாறாக தனது திரைப்பட பணிகளை படு பிஸியாக செய்து வருகிறார்.

https://twitter.com/Priyabshankar_f/status/1171598391454793728

அதே போல தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற் பயிற்சிகளையும் செய்து வருகிறார் பிரியா பவானி சங்கர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 96 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ஆதித்யா பாஸ்கருடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரியா பவானி சங்கர், தற்போது ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full