ரகசியமாக நடந்து முடிந்த ஆல்யா மானஸா – சஞ்சீவ் திருமணம்.! பிரபல நடிகர் பதிவிட்ட புகைப்படம்.! ரசிகர்கள் ஷாக்.!

0
8641
karthik-semba

தமிழ் சினிமா திரைப்படங்களுக்கு நிகராக தற்போது தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் இல்லாமல் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகைகளின் புகழுக்கு ஏற்றவாறு சீரியல் நடிகர்களும் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ளனர். சில காலமாகவே மக்கள் தியேட்டருக்கு சென்று படங்கள் பார்க்கும் ஆர்வம் காட்டுவதை விட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அதிலேயேயும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியில் பல பிரபலமான சீரியல் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.

அந்தவகையில் சில நாட்களுக்கு முன்னால் முடிவடைந்த ராஜாராணி சீரியல் இளைஞர்களிடமும், பல குடும்பங்களின் மனதில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும் , செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து வந்தார்கள். இவர்களுடன் பல நடிகர்களும் நடித்து வெற்றிகரமாக பல வருடங்களை கடந்து ஓடிய இந்த சீரியல் சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது.இதனால் பல பேர் வருத்தத்தில் ஆழ்ந்தனர். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன் அவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள்.அந்நிலையில் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தபின் கல்யாணம் குறித்து எந்த தேதியும் அறிவிக்கவில்லை.

இதையும் பாருங்க : லாஸ்லியாவின் தந்தையால் வெளியேறினாரா கவின்.! முன்னாள் பிக் பாஸ் பிரபலம் சொன்ன தகவல்.!

- Advertisement -

சீரியல் முடிவதற்குள் இருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்து விடும் என்று இணையங்களில் ஒரு சிலரால் பேசப்பட்டது.மேலும் ராஜா-ராணி-சீரியல் முடிந்தவுடன் இவர்களிருவரும் வெளியூருக்கு டூர் சென்று இருந்தனர், அங்கு ஆலியா மானசா, சஞ்சீவ் இருவரும் யாரிடமும் தெரியப்படுத்தாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள் என்று சீரியல் நடிகருமான,ஆர் ஜேவுமான சரவணன் மீனாட்சி செந்தில் கூறினார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுப்பின.

இதற்கு செந்தில்,அட ஆமாம், அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என்று புகைப்படம் போட்டு தான் வாழ்த்தை சமூகவலைத்தளங்களில்தெரிவித்துள்ளார் .மேலும் கூடிய விரைவில் அனைவருக்கும் தெரியவரும் என்றும்குறிப்பிட்டுள்ளார். சீரியல் நடித்த சிலநாட்களிலேயே மக்களின் மனதில் அதிக இடம்பிடித்தவர் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் மக்களிடையே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement