ஏன் இப்படி கிளாமர் ரோல் பண்றீங்க, நம்ம கலாச்சாரம் என்ன அவரது – அற்ப புத்தி நெட்டிசன்களுக்கு பிரியா பவானி சங்கரின் பதில்கள்.

0
969
priya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. மேலும், இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is priya11-1024x637.jpg

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார் ப்ரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி, வெங்கடேசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். பின் சமீபத்தில் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் ‘ஓ மணப்பெண்ணே’.

- Advertisement -

பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்கள்:

இந்த திரைப்படம் ஹாட் ஸ்டார் Ott தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அபிஷேக் குமார், அன்புதாசன், அனிஷ் குருவில்லா, குக்கு வித் கோமாளி அஸ்வின், கே எஸ் ஜி வெங்கடேஷ் போன்ற பலர் நடித்து உள்ளார்கள். வெங்கடேஷ் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ப்ரியா பவானி சங்கர் அவர்கள் குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன், மற்றும் இந்தியன் 2, யானை போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கவர்ச்சியில் இறங்கிய பிரியா பவானி சங்கர்:

இந்நிலையில் பிரியா பாவனி சங்கரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் நடிகைகள் திடீரென கவர்ச்சிக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. அந்த வரிசையில் பிரியா பவானி சங்கர் குதித்து இருக்கிறார். இவர் இது வரை நடித்த படங்களில் அனைத்துமே கவர்ச்சி இன்றி நடிப்புக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார்.இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

உள்ளாடை Size கேட்ட ரசிகர் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்களின் Bra size என்ன’ என்று கேட்டு இருந்தார். அதற்க்கு பதில் அளித்த பிரியா பவானி ஷங்கர் ‘என்னுடையது 34D மார்பகம் என்பது நான் வேறு எதோ கிரகத்தில் இருந்து வாங்கி வந்தது இல்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் இரண்டு ஜோடி இருக்கும்.

கலாச்சாரம் குறித்து கேட்ட ரசிகர் :

நீங்கள் ஆடையை Zoom செய்து நீங்கள் பார்க்க போறீங்க. அதற்கு வாழ்த்துக்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். அதே போல இன்னொருவர், ஏன் சமீப காலமாக கிளாமர் ரோலில் நடிக்கிறீர்கள், நம் கலாச்சாரம் என்ன ஆவது என்று கேட்க, அதற்கு ‘Crop top போட்டு ஒரு போட்டோ போட்ட உங்கள மாதிரி ஆளுங்க காண்டவராங்க இல்ல அத பாக்க ஜாலியா இருக்கு. அப்புறம் கலாச்சாரம் ? Crop டாப் போட்ட ஒரு பொண்ணு உங்க கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீங்க பண்றதே நல்லா பன்னிட்டு இருக்கீங்க’ என்று பதிலடி கொடுத்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.

Advertisement