பிரியா வாரியரின் புதிய லுக் - வையாபுரி, பிரசாந்தின் லேடி கெட்டப்போடு ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை தான் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய முக பாவனைகள் சடசடவென உலகம் முழுவதும் பரவி வரை இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது. சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
https://twitter.com/420rudra/status/1429308084846047239
ஒரு ஆதார் லவ் மூலம் புகழின் உச்சியில் இருந்த பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா வாரியர் மோசமான ஆடைகளிலும் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் பாருங்க : Survivor ஷோக்கு வேற லெவல் Contestantsஐ இறக்கிய ஜீ தமிழ். கண்டிப்பா பிக் பாஸ்க்கு டஃப் கொடுக்கும் போலயே. ப்ரோமோ இதோ.
இதனால் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல ஒரு அடார் லவ் படத்திலேயே லிப் லாக் காட்சியில் நடித்திருந்த பிரியா வாரியர், ஸ்ரீதேவி பங்களா படத்தில் நீச்சல் உடையிலும், தண்ணி அடிக்கும் காட்சிகளிலும், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதே போல சமீபத்தில் சில நாட்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட முடக்கி இருந்தார்.
https://twitter.com/chettyrajubhai/status/1429312807527346179
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் இன்ஸ்டாவில் இணைந்த பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் இவர் ஓனம் பண்டிகையை முன்னிட்டு சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இவரை லேடி கெட்டப் போட்ட பிரசாந்த், வையாபுரியின் புகைப்படங்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.