Survivor ஷோக்கு வேற லெவல் Contestantsஐ இறக்கிய ஜீ தமிழ். கண்டிப்பா பிக் பாஸ்க்கு டஃப் கொடுக்கும் போலயே. ப்ரோமோ இதோ.

0
45425
survivor
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வேறு எந்த தொலைக்காட்சியிலும் ரியாலிட்டி நிகழ்ச்சி இல்லை என்பதே உண்மை.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது.அதற்கு போட்டியாக தற்போது சன் டிவியில் மாஸ்டர் செப் துவங்கப்பட்டது. ஆனால், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இணையாக இந்த நிகழ்ச்சி ஹிட் அடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் ஜீ தமிழ் ‘Survivor’என்ற புதிய ஷோவை களமிறங்கி இருக்கிறது.

இதையும் பாருங்க : என்னையா நடக்குது, ஸ்ரீதர் சேனாவை தொடர்ந்து சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறிய திறமையான பாடகர்.

- Advertisement -

தற்போது விஜய் டிவி சீரியலுக்கு டப் கொடுக்கும் சீரியல்களை ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு டப் கொடுக்கும் எந்த சரக்கும் ஜீ தமிழிடம் இல்லை. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டி கொடுக்கும் வகையில் ‘Survivor’ என்ற புதிய ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அர்ஜுன் அறிவிக்கப்பட்டு இருந்தது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது, வெளிநாட்டில் ஒளிபரப்பான ‘Survivor’ நிகழ்ச்சிக்கு இணையாக இந்த ஷோ இருக்குமா என்ற கேள்வி நிலவியது. ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோ அந்த சந்தேகத்தை எல்லாம் தீர்த்து வைத்துள்ளது. இந்த ஷோவில் விஜயலக்ஷ்மி, பிகில் பட நடிகை காயத்ரி, ஸ்டண்ட் மாஸ்டர் பெசன்ட் நகர் ரவி, விக்ராந்த், ஸ்ரிஷ்டி டாங்கே, vj பார்வதி, நடிகர் நந்தா, தம்பி ராமய்யா மகன் உமாபதி என்று பலர் பங்கேற்க இருப்பது இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement