நீச்சல் குளத்தில் பிரியா வாரியரை கையில் ஏந்தி நிற்கும் இளம் நடிகர்.

0
32271
Priya-Varrior
- Advertisement -

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி காட்டி செய்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை தான் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் இவர் காட்டிய முக பாவனைகள் சடசடவென உலகம் முழுவதும் பரவி வரை இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது. சமூக வளைதளத்தில் மட்டும் இவரை 70 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

ஒரு ஆதார் லவ் மூலம் புகழின் உச்சியில் இருந்த பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா வாரியர் மோசமான ஆடைகளிலும் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல ஒரு அடார் லவ் படத்திலேயே லிப் லாக் காட்சியில் நடித்திருந்த பிரியா வாரியர், ஸ்ரீதேவி பங்களா படத்தில் நீச்சல் உடையிலும், தண்ணி அடிக்கும் காட்சிகளிலும், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் பாருங்க : தாய் மாமனின் படத்தை தனது தாயுடன் சென்று பார்த்த அஜித் மகள். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

இதனால் பிரியா வாரியர் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தார்கள். ஆனால், அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் காது கொடுக்காமல் இருந்து வந்தார் பிரியாவாரியர், இருப்பினும் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறாராம் அம்மணி. படவாய்ப்புகள் இல்லை என்றாலும் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியாவாரியர் அடிக்கடி பல்வேறு போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

View this post on Instagram

?

A post shared by Priya Prakash Varrier? (@priya.p.varrier) on

அந்த வகையில் சமீபத்தில் இளம் நடிகர் ஒருவருடன் நீச்சல் குளத்தில் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. என்னதான் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கினாலும் அம்மணியின் பொழப்பு எந்த வித பிரச்னையும் இல்லாமல் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement