ஆஸ்துமா இருக்கு பட்டாசு புகை ஒத்துக்காது.! ஆனால், சிகரெட் புடிக்கலாமா?

0
1178
Priyanka-Chopra
- Advertisement -

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பின்னர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முடிசூடா ராணியாக விளங்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. அதுமட்டுமல்லாது அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

-விளம்பரம்-
View image on Twitter

இந்தியில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட்டிலும் கால் தடத்தைபதித்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு தன்னைவிட பல மடங்கு வயதில் சிறியவரான பிரபல பாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். இதனால் பலரும் வயதில் சிரியவரை திருமணம் செய்து கொண்டீர்களா என்று பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்து இருந்தனர். ஆனால், அதைப் பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார் பிரியங்கா சோப்ரா.

இதையும் பாருங்க : மறுபடியுமா.! கவின் அமைதியா இருந்தாலும் லாஸ்லியா விடாது போல.! 

- Advertisement -

இந்த நிலையில் பிரியங்காவின் கணவரான நிக் ஜோனஸ் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். கணவரின் பிறந்த நாளை கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடிய பிரியங்கா சோப்ரா புகைபிடிப்பது போல இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தன. இந்த புகைப்படத்தை கண்ட பலரும் பிரியங்கா சோப்ராவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமே கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா தனக்கு ஆஸ்துமா இருப்பதாகவும் ஆனால் ஆஸ்துமாவை தான் கட்டுப்பாட்டில் வைத்து வருவதாகவும் அதற்காக நான் மருந்துகளையும் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார் அதுமட்டுமல்லாது கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதால் புகை மாசு ஏற்படுவதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் பிரியங்கா சோப்ரா.

-விளம்பரம்-

ஆனால், தற்போது அவர் புகைப்பிடிக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உபதேசம் ஊருக்கு மட்டும் தானா உங்களுக்கு கிடையாதா என்று பிரியங்கா சோப்ராவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். ஆனால், இது ஒருபுறமிருக்க இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் பிரியங்கா சோப்ரா புகைபிடிப்பது போல யாரோ சிலர் இப்படித் செய்துள்ளார்கள் என்றும் மற்றும் ஒரு புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.

Advertisement