விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த முறை நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் , தயாரிப்பு Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் பூஜா, சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர்.
குக் வித் கோமாளி 5:
இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் தான் ஆகிறது. மேலும், நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல புது கான்செப்ட்கள் வழங்கி வருகிறார்கள். கோமாளிகளும் வழக்கம் போல் குக்குகளையும் நடுவர்களையும் கலாய்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், அதை பிரியங்கா காமெடியாக எடுத்துக் கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.
நெட்டிசன்கள் கமெண்ட்:
அதில், இந்த சீசனில் பிரியங்கா செய்யும் சில விஷயங்கள் கடுப்பை ஏற்றும் அளவிற்கு இருக்கிறது. கோமாளிகள் செய்யும் காமெடியை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்து கொண்டு வெறுப்பை காண்பித்து வருகிறார். பிரியங்கா தொகுப்பாளராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்தாலும் அவர் ரொம்ப வொர்ஸ்ட் கேரக்டர். எல்லா நிகழ்ச்சிகளிலும் அவரை தான் எல்லோரும் கவனிக்க வேண்டும் என்று சில வேலைகளை செய்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக இருந்தாலும் தொகுப்பாளர் போலவே சீன் போடுகிறார் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.
பிரியங்கா பற்றிய தகவல்:
விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரியங்கா பிரபலமானார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ப்ரியங்கா:
பின் இவர் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதோடு இவர் டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.