தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் – தற்போதே மீம்ஸ் போட்டு கதரும் நெடிசன்கள்.

0
415
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். படத்தில் மாளவிகா மோகனன், இயக்கி சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
Dhanush Play As Madurai Boy In Atrangi-Re

அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடிந்த நிரையில் படக்குழு அடுத்த கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

- Advertisement -

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், வாத்தி, sir ஆகிய பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் தி கிரேட் மேன். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

ப்ரியங்கா மோகன்-தனுஷ் கூட்டணி:

இந்த நிலையில் தனுஷ் படத்தில் பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த சாணி காயிதம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதனை தொடர்நது இயக்குனர் மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது.

-விளம்பரம்-

தனுஷை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனிடம் பேசப்பட்டு இருந்தது. பின் அவர் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் தனுஷை கிண்டல் செய்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை குவித்து வருகிறார்கள். அது என்னவென்றால், தனுஷுடன் நடிகைகள் நடித்தாலே போதும் அவருடன் இணைத்து கிண்டல், கேலி பேசுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பிரியங்கா மோகன் தனுஷ் படத்தில் நடிக்க இருப்பதால் பிரியங்கா பாவம்,

ப்ரியங்கா மோகனின் திரைப்பயணம்:

தனுஷ் அவர் வேலையை காட்டி விடுவார், அவருடன் நடிக்கிறீங்களா? என்றெல்லாம் கிண்டல் செய்து மீம்ஸ்களை குவித்து வருகிறார்கள். தற்போது தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ப்ரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் எதற்கும் துணிந்தவன்,டான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement