சிவகார்த்திகேயன், சூர்யாவுடன் நடித்துவிட்டு தற்போது 51 வயது தெலுங்கு பட நடிகரின் படத்தில் கமிட் ஆன பிரியங்கா மோகன்.

0
659
Priyanka
- Advertisement -

51 வயது நடிகருடன் பிரியங்கா மோகன் ரொமான்ஸ் செய்யும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென் இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டாக்டர் படத்தில் பிரியங்கா கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டார் என்று சொல்லலாம். இந்த படத்தில் இவருடைய நடிப்பும், அழகும் இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டது. அதன் பின் இவர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

பிரியங்கா மோகன் திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டான் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே பிரியங்கா மோகன் திகழ்ந்து வருகிறார். தற்போது இயக்குனர் மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

பிரியங்கா மோகன் நடிக்கும் படங்கள்:

பின் இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி 30 படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை எம். ராஜேஷ் இயக்குகிறார். இப்படி இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பிரியங்கா நடிக்கும் புது படம்:

இந்த நிலையில் பிரியங்கா மோகன் பிரபல நடிகரின் படத்தில் கமிட்டாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. அதாவது, தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் பவன் கல்யாண். இவருக்கு ஜோடியாக தான் ஒரு படத்தில் பிரியங்கா கமிட்டாக இருக்கிறார். அந்த படத்திற்கு ஓ ஜி என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படத்தை சுஜித் இயக்குகிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக பிரியங்காவும் டீவ்ட் போட்டியிருக்கிறார். அதில் அவர், எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பிரியங்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement