சினிமா நாசமா போச்சு ! நயன்தாராவுக்கு 5 கோடி கொடுத்தா அப்படித்தான் ஆகும் ?

By Ajju · 8/2/2018
நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளத்தை கொடுத்துவிட்டு தமிழ் சினிமா தெருக்கோடிக்கு வந்துவிட்டது என பிரபல தயாரிப்பாளர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் கே.ராஜன். இவர் தற்போது 'சிவா மனசுல ப்யூசா' என்ற ஒரு படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் பிரமோசன் விழாவில் பேசிய கே.ராஜன் நயன்தாராவிற்கு 5 கோடி ஹன்சிகாவுக்கு 3 கோடி தமன்னாவிற்கு 1 கோடி என நடிகைகளுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்ததால், தமிழ் சினிமா வீதிக்கு வந்துவிட்டது. இப்படி நடிகைகளை பிரோமோட் செய்துவிட்டு தயாரிப்பாளர் தெருவில் நிற்கிறார். தயாரிப்பாளர்கள் அழிந்துவிட்டால் சினிமா அழிந்துவிடும். ஆனால் இன்று வரை தயாரிப்பாளர்கள் தெருவில் தான் நிற்கின்றனர். படம் வெளியாகி நடிகைகளுக்கு மாஸ் செய்யும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் படத்தில் தயாரிப்பாளர் என்ன ஆனார் என காட்டுவதில்லை. என கூறினார்
Tamil Behind Talkies AMP · Quick view
View full