சினிமா நாசமா போச்சு ! நயன்தாராவுக்கு 5 கோடி கொடுத்தா அப்படித்தான் ஆகும் ?

0
1403

நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளத்தை கொடுத்துவிட்டு தமிழ் சினிமா தெருக்கோடிக்கு வந்துவிட்டது என பிரபல தயாரிப்பாளர் பேசியுள்ளார்.

K Rajan

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் கே.ராஜன். இவர் தற்போது ‘சிவா மனசுல ப்யூசா’ என்ற ஒரு படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் பிரமோசன் விழாவில் பேசிய கே.ராஜன்

நயன்தாராவிற்கு 5 கோடி ஹன்சிகாவுக்கு 3 கோடி தமன்னாவிற்கு 1 கோடி என நடிகைகளுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்ததால், தமிழ் சினிமா வீதிக்கு வந்துவிட்டது. இப்படி நடிகைகளை பிரோமோட் செய்துவிட்டு தயாரிப்பாளர் தெருவில் நிற்கிறார்.

Hansika-Nayanatara

தயாரிப்பாளர்கள் அழிந்துவிட்டால் சினிமா அழிந்துவிடும். ஆனால் இன்று வரை தயாரிப்பாளர்கள் தெருவில் தான் நிற்கின்றனர். படம் வெளியாகி நடிகைகளுக்கு மாஸ் செய்யும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் படத்தில் தயாரிப்பாளர் என்ன ஆனார் என காட்டுவதில்லை.

என கூறினார்