நயன்தாரா ப்ரோமோஷனுக்கு வர்லனா பரவாயில்ல, ஏன்னா? ஆனால், திரிஷா – வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்.

0
14359
TrishaNayanthara

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் தான் பொது நிகழ்ச்சிகளிலும் தனது படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்வதை எப்போதும் நிறுத்திவிட்டார் தற்போது நடிகைகளில் நயன்தாரா அதே ரூட்டை பின்பற்றி வருகிறார். இந்த நிலையில் நடிகை திரிஷாவும் தற்போது புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் இருந்ததால் தயாரிப்பாளர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.தற்போது இயக்குனர் திருஞானம் இயக்கத்தில்”பரமபதம் விளையாட்டு” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரெஸ் மீட் ஒன்று நடைபெற்றது.

வீடியோவில் 1:55 இருந்து பார்க்கவும்

- Advertisement -

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் சிவா, பேசிய தயாரிப்பாளர் சிவா, ஒரு பெரிய நடிகரின் படம் என்றால் அதில் நடிகைகள் புரமோஷனுக்கு வரவில்லை என்றாலும் கூட அந்த பெரிய நடிகரை வைத்து புரமோஷன் நிகழ்ச்சியை முடித்து விடலாம். ஆனால், இதுபோன்ற ஒரு படத்திற்கு புரோமோஷன் செய்ய வேறு எந்த ஒரு பெரிய நடிகரும் கிடையாது. இதனால் நீங்கள் பிரமோஷனில் வந்தால் இது அவர்களின் வாழ்விற்கும் ஒரு நல்ல பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தற்போது வேண்டுமானால் இந்த படத்தின் கதாநாயகி புரமோஷனுக்கு வராமல் இருந்திருக்கலாம். ஆனால், அடுத்த புரமோஷனுக்கு அவர் வரவில்லை என்றால் அவர் வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை தயாரிப்பாளர்களின் சங்கம் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார். ஆனால், இதே போன்று நயன்தாராவும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.

-விளம்பரம்-

வீடியோவில் 5 : 45 நிமிடத்தில் பார்க்கவும்

ஆனால், நயன்தாரா வராதது குறித்து தயாரிப்பாளர் சிவா எதுவும் கேள்வி எழுப்பவில்லை. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் விளக்கமளித்த சிவா, நயன்தாரா அக்ரீமென்ட் போடும் போதே என்னுடைய ப்ரைவேசி மற்றும் பாதுகாப்பு காரணத்திற்காக நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதை ஒப்புக்கொண்டு தான் அவரை ஒப்பந்தம் செய்கிறார்கள்.

அதே போல நயன்தாரா ப்ரோமோஷனுக்கு வந்து தான் அது நயன்தாராவின் படம் என்று தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. நயன்தாரா என்ற அந்த பெயர் ஒன்று போதும். ஆனால், திரிஷாவிற்கு அந்த பெயர் என்னும் வரவில்லை. எனவே, அந்த லெவலுக்கு ரீச் ஆனதுக்கு அப்புறம் நீங்கள் அது போல செய்யுங்க. தலையா இருக்கும் போது தலையாட்டலாம். ஆனால், வாலா இருக்கும் போது அது முடியுமா என்று கூறியுள்ளார் சிவா.

Advertisement