விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு எதிராக தயாரிப்பாளர் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், சமீப காலமாக இவர் நடிப்பில் வந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. பின் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மகாராஜா’. இந்த வெளியாகி இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருவது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் மகாராஜா படத்திற்கு எதிராக தயாரிப்பாளர் கொடுத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, நாகன் என்கிற மருதமுத்து பழனியை சேர்ந்தவர். இவர் கந்தவேல் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். ஆனால், பல காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை.

Advertisement

மகாராஜா படம்:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் திரையரங்களில் மகாராஜா படம் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்துட்டு மருதமுத்து, தான் முறையாக பதிவு செய்துள்ள கதையை திருடி மகாராஜா படமாகி இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மருதமுத்து, பழனி அருகே உள்ள மானூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ஒரு கதையை எழுதி என்னிடம் கொடுத்தார். கதை நன்றாக இருந்ததால் அதனை நான் 10 லட்சம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினேன்.

மகாராஜா படம் மீது புகார்:

அந்த கதையை அத்தியாயம் ஒன்று என்று பெயரிட்டு 2020 ஆம் ஆண்டு முறையாக பதிவு செய்து வைத்தேன். பின் அத்தியாயம் என்ற கதையை குறும்படமாக எடுத்து அதனை எடிட்டிங் செய்வதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கொடுத்தேன். பின் அத்தியாயம் ஒன்று திரைப்படமாக எடுக்க முடிவு செய்து கடந்த ஆண்டு கதையும் கூறி 5.5 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க முடிவு செய்தேன். படப்பிடிப்பை பழனியில் நடத்தவும் திட்டமிட்டேன். ஆனால், படப்பிடிப்பு எடுக்கும் நேரத்தில் கனமழை வந்ததால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தோம்.

Advertisement

மகாராஜா கதை விவகாரம்:

இதற்கிடையில் தான் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தை பார்த்தபோது நான் முறையாக பதிவு செய்திருந்த ‘அத்தியாயம்’ என்ற திரைக்கதை அப்படியே படமாக்கி இருக்கிறார்கள். இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். இது குறித்து விசாரித்ததில் ‘மகாராஜா’ திரைகதையை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக பதிவு செய்யவே இல்லை என்பது எனக்கு தெரிய வந்தது. என்னுடைய கதையை குறும்படமாக செய்ய கொடுத்த இடத்திலிருந்து கதையை திருடி இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Advertisement

புகார் தொடர்பாக அளித்த பேட்டி:

இது குறித்து நான் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தேன். இருந்தாலும் எனக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை. தமிழ் திரை உலகில் சிறு திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் பிழைக்க முடியாத நிலையில் நானும் ஒருவராக மாறி இருக்கிறேன். இதன் மூலம் எனக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய புகாரை முறையாக விசாரித்து எனக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய வேண்டும். இனிமேல் இதுபோன்று சிறு திரைப்பட தயாரிப்பாளர் எவரும் பாதிக்கப்படக்கூடாது. இந்த விவகாரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement