கிங்ஸ்லீ மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் – வடிவேலு போல இவருக்கு ரெட் கார்ட்டா ?

0
559
kingsley
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இவர் பல வருடங்கள் முன்பே சினிமாவில் கால்பதித்திருக்க வேண்டியவர். அதுவும் நெல்சன் மூலமாகவே நிகழ இருந்தது. நெல்சன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதுதான், ரெடின் கிங்ஸ்லி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தால், நெல்சன் தனது முதல் படத்தில் ரெடினை இணைத்தார்.

-விளம்பரம்-

வேட்டை மன்னன் படத்தில் கிங்ஸ்லி :

பின் 2010-ம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை நெல்சன் தொடங்கினார். இதில் ரெடினும் நடித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த படம் பாதியிலேயே டிராப் ஆனது. மேலும், நெல்சனை போல் ரெடினுக்கும் திரைத்துறை அறிமுகம் தள்ளிப்போனது. பின் ஏழு வருட போராட்டத்துக்கு பிறகு, ‘கோலமாவு கோகிலா’ மூலம் மீண்டும் நெல்சன், ரெடின் இருவரும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்தார். மீண்டும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.

- Advertisement -

அறிமுகப்படுத்திய நெல்சன் :

நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த படம் வசூலில் கோடிகளை குவித்தது. மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படத்தின் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி பண்டிகை முன்னியிட்டு வெளிவந்த அண்ணாத்தா படத்தில் காமெடியனாக நடித்து இருந்தார்.

ரஜினி முதல் விஜய் படம் வரை :

இதனை தொடர்ந்து ரெடின் அவர்கள் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தலை சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், கோஷ்டி, வீட்டுல விஷேசங்க, ஆர்ஜே பாலாஜியின் படம் ஆகிய படங்களில் காமெடி நடிகனாக நடித்து உள்ளார். இதனால் இனி கோலிவுட் வட்டாரத்தில் ரெடின் கிங்ஸ்லி தான் டாப் காமெடி கிங்காக இருப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூட ரஜினிகாந்த நடித்தது வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதோடு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ரெடின் கிங்ஸ்லி மீது புகார் :

இந்த நிலையில் தான் லெக் பீஸ் என்ற படத்தில் தயாரிப்பாளர் மணிகண்டன் என்பவர் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லின் மீது புகார் ஒன்றை தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில் ரெடின் கிங்ஸ்லி தான் தயாரித்து வரும் லெக் பிஸ் படத்தில் 10 நாட்கள் நடிப்பதற்கு முழு பணத்தையும் வாங்கிவிட்டு 4 நாட்கள் மட்டுமே நடித்திருப்பதாகவும் அத்ற்கு மேல் நடிக்க மறுத்தால் தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

நஷ்டத்தை ஈடு செய்ய கோரிக்கை :

மேலும் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லியால் இழந்த பணத்தை திரும்பி பெற்று கொடுக்குமாறும் தயாரிப்பாளர் சங்கத்திடம் “லெக் பீஸ்” பட தயாரிப்பாளர் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ரெடின் கிங்ஸ்லியிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு வடிவேலு போல கிங்ஸ்லீக்கு ரெட் கார்ட் கிடைத்து விடுமோ என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது.

Advertisement