1996-ல் அஜித் வாங்கிய 2,00,000 ரூபாய் – ஆதாரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர். அஜித் தரப்பு மௌனம்.

0
5565
ajith

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். அஜித் பற்றி பலர் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தான் இதுவரை நாம் பார்த்திருப்போம் ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் வாங்கிய பணத்தை இன்னும் திருப்பித்தரவில்லை என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர். 1996-ல் அஜித் என்னிடம் பணம் கேட்டார். என்னுடைய அப்பா அம்மா சிங்கப்பூர் போக வேண்டும் எனக்கு ஒரு 6 லட்சம் ரூபாய் பணம் கொடுங்கள் என்று கேட்டார். நானும் அந்த 6 லட்சம் ரூபாய்க்கு டிராப்ட் வாங்கி கொடுத்துவிட்டேன்.

வீடியோவில் 7 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

அவள் வருவாளா திரைப்படத்தை நான் தயாரிப்பதாக இருந்தேன். அதேபோல அஜிதிக்கும் 12 லட்ச ரூபாயை கொடுத்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதன் பின்னர் அஜித் எனக்கு போன் செய்து வெடமுத்துவிற்குி நீங்கள் உதவி செய்ய வேண்டாம் உங்களுக்கு நான் உங்களுக்கு தனியாக ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என்றார்.அப்போது இந்த பணத்தை நான் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று சொன்னதால் நானும் விட்டுவிட்டேன். பின்னர் அந்தப் படமும் சரியாக ஓடவில்லை அதன்பின்னர் பணத்திற்காக நான் அஜீத்தை தொடர்பு கொண்டால் அவரிடம் இருந்து பதில் வரவில்லை.

- Advertisement -

மேலும் 1996 ஆம் ஆண்டு வாங்கிய 18 லட்சம் இன்று என்ன மதிப்பு அதை இதுவரை கொடுக்கவே இல்லை. இதனிடையே நான் முதலில் கொடுத்த 6 லட்சத்தில் வாங்கவில்லை என்று சத்தியம் செய்கிறான்.பின்னர் என்னாலும் வங்கியிலிருந்து அந்த கணக்குகளை எடுக்க முடியவில்லை. இப்படியே போக ஒரு கட்டத்தில் நான் பணமே வாங்கவில்லை என்று சொல்லிவிட்டார் என்று அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்தார் தயாரிப்பாளர் நாராயணன்.

தற்போது 50 கோடி 40 கோடி சம்பளம் வாங்குற இப்போது நான் கஷ்டத்தில் இருக்கிறேன் உனக்கு லெட்டர் கொடுத்தால் அதற்கு பதில் சொல்வது கிடையாது. தயாரிப்பாளர் சங்கத்தில் கூட நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் ,எனக்கு பதில் வரவில்லை. இப்படி ஒரு நடிகன் வாங்கிய பணத்தை இல்லை என்று சொல்வானா இன்று நீ 40 ,60 கோடி சம்பாதிக்க என் பணத்தைகுடுடா, ஏண்டா இப்படி ஏமாத்தறீங்க. எனக்கு நீ படம் பண்ணி தர வேண்டாம்டா என் பணத்தை கொடுடா என்று புலம்பித் தள்ளிஇருந்தார்.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அஜித் தரப்பில் விளக்கம் கேட்ட போது பதிலளிக்க விரும்பவில்லை என்று முடித்துக் கொண்டனர். இப்படி ஒரு நிலையில் அஜித்துக்கு தான் கொடுத்த 2 லட்ச ரூபாய்க்கான ஆதாரத்தை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் வெளியிட்டுள்ளார். அந்த ஆதாரம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement