துப்பாக்கி படம் தொடர்பாக தயாரிப்பாளர் தாணு கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த படம் தான் துப்பாக்கி.

இந்த படத்தில் காஜல் அகர்வால், சத்யன், அக்ஷரா, வித்யூத் ஜம்வால், ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். இந்த படம் ராணுவ கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. மேலும், இந்த படம் இன்றுடன் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.
துப்பாக்கி படம்:
அதுமட்டுமில்லாமல் விஜய்யின் கேரியரிலேயே இந்த படம் தான் 100 கோடி பாக்ஸ் ஆபிஸிஸ் வசூல் சாதனையை செய்த முதல் படம். இது விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். இந்த படத்திற்காக விஜய்க்கு பல விருதுகள் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துப்பாக்கி படம் தொடர்பாக தயாரிப்பாளர் தாணு சொன்னது, துப்பாக்கி பட சூட்டிங் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஒரே ஒரு பாடல் மட்டும் தான் இருந்தது. சுவிட்சர்லாந்தில் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

தயாரிப்பாளர் பேட்டி:
எனக்கு அந்த பாடலுக்கான பட்ஜெட்டுக்காக 80 லட்சம் ரூபாய் கேட்டார்கள். ஆனால், எனக்கு கடைசியில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் வந்தது. நான் இயக்குனரிடம், தம்பி பட்ஜெட்டையும் தாண்டி போகுதே என்று கேட்டேன். அதற்கு அவர், நாம ரொம்ப சிக்கனமாக தான் சார் எடுக்குறோம். ஆனா, இவ்வளவு பேரை சுவிட்சர்லாந்துக்கு கூட்டிட்டு போக வேண்டி இருக்கு. அதனால பட்ஜெட் அதிகமாகுது என்று சொன்னார். இந்த விஷயம் விஜய்யின் காதுக்கு போனது.
விஜய் செய்தது:
உடனே விஜய், அவருடைய உதவியாளர் ராமுவிடம் 65 லட்சம் காசோலையை கொடுத்து என்னிடம் கொடுக்க சொல்லி இருந்தார். அதற்கு நான், தம்பி என்னை தயாரிப்பாளராக தேர்ந்தெடுத்து அவர் செலவு பண்ணுவது சரியா இருக்குமா? பட்ஜெட்டுக்கு மேல இருக்குதுன்னு தான் சொன்னேன் தவிர பண்ண மாட்டேன்னு சொல்லவில்லை. இந்த செக்கை அப்படியே விஜய் தம்பியிடம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.

விஜய் குறித்த தகவல்:
மேலும், சொன்ன பட்ஜெட்டை தாண்டியே போனது. ஆனால், அந்த செலவையை விஜய் ஏற்றுக் கொள்ள வந்தததை நினைத்து நெகிழ்ந்து போனேன். பின் அந்த பாடலை சுவிட்சர்லாந்தில் சிறப்பாக எடுத்து முடித்தோம் என்று கூறி இருக்கிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கோட் படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதை அடுத்து விஜய் அவர்கள் தற்போது தளபதி 69 என்ற படத்தில் நடிக்கிறார்.






