உங்கள ரெண்டு நிமிஷம் சைட் அடிச்சிட்டு தான் நமஸ்காரம் பண்ணேன் – பிரபல vjவிடமே சொன்ன YG. யார் அந்த vjனு பாருங்க.

0
2846
ygm
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.பி.பி பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-

இது தொடர்பான புகைப்படங்களையும் மாணவிகள் பகிர்ந்துள்ளனர். அதே போல மனைவி ஒருவருக்கும் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். அதோடு மாணவிகளின் போட்டோஸ்களை வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி ஆசிரியர் கூறியிருக்கிறார்.23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்த பள்ளியானது, திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையார்,  ஒய்.ஜி.பார்த்தசாரதி (யேச்சா குஞ்சா பார்த்தசாரதியால் ( யேச்சகுஞ்சா பார்த்தசாரதி ; 30 செப்டம்பர் 1917 – 1990) தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு,  அவரது மனைவியும்,  பிரபல கல்வியாளருமான   ராஜலட்சுமி பார்த்தசாரதி நடத்தி வந்தார். பின்னர் அவரும் காலமானதை தொடர்ந்து தற்போது இதனை அவரது குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

ஆனால், பள்ளியை நானோ எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை. நான் பள்ளியில் ஒரு டிரஸ்டி மட்டும் தான். எனது தம்பி மனைவியும் தம்பியும் தான் வழி நடத்துகிறார்கள் என்று ஒய்.ஜி, மகேந்திரன் கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் ஒய் ஜி மகேந்திரனுக்கு எதிராக பல பதிவுகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இவர் பேட்டி ஒன்றில் தொகுப்பாளினியை சைட் அடித்ததாக கூறிய வீடியோ ஒன்றை ட்விட்டரில் தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதுவும் அந்த தொகுப்பாளினி வேறு யாரும் இல்ல vj தாரா தான்.

-விளம்பரம்-
Advertisement