தமிழ் சினிமா உலகில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை கொடுப்பதில் மிஷ்கின் கைதேர்ந்தவர். அதுவும் இவருடைய படங்கள் எல்லாம் திர்ல்லர், ஆக்ஷன் போன்ற வகைகளைத் தான் சேர்ந்து உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவான படம் தான் “சைக்கோ”. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இசைஞானி இளைராஜா அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். இன்று சைக்கோ படம் திரை அரங்கில் வெளியாகி உள்ளது. பார்வையில்லாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார்.

கதைக்களம்:

Advertisement

இளம் பெண்களை தொடர்ச்சியாக சைக்கோ கும்பல் கடத்தப்பட்டு தலையில்லாமல் பொது இடங்களில் பிணமாக தூக்கி போடுகிறார்கள். இந்த வழக்கு காவல் அதிகாரியாக வரும் ராம் விசாரித்து வருகிறார். இந்த கொடூர சம்பவங்கள் சில வருடங்களாகவே நிகழ்ந்து வருகிறது. இப்படி நிகழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு சின்ன குளு கூட கிடைக்காமல் இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த காவல்துறையும் என்ன செய்வது என்று தெரியாமல் மண்டை குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் தான் பார்வையில்லாத மாற்றுத் திறனாளிஉதயநிதி ஸ்டாலின் எப்எம் வானொலியில் பணிபுரிந்து வரும் அதிதி ராவ் ஹைத்ரியை ஒரு தலையாக காதலித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் காதலை முதலில் அதிதி ராவ் மறுத்தாலும் பின்னர் அவருடைய உண்மையான காதலை புரிந்து கொண்டு காதலிக்க தொடங்குகிறார். பின் அதிதி ராவ் தன் காதலை சொல்ல ஒரு இடத்திற்கு உதயநிதி ஸ்டாலினை வரச் சொல்கிறார். உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு முன்னரே திடீரென சைக்கோ கொலைகாரன் கும்பல் அதிதி ராவ்வை கடத்துகிறார்கள்.

Advertisement

Advertisement

இதனை அறிந்த உதயநிதி ஸ்டாலின் தன் காதலியை காப்பாற்ற பல முயற்சிகளை செய்கிறார். ஆனால், போலீஸ் அலட்சியமாக இருக்கிறார்கள். இதனால் பார்வை இல்லாமல் இருந்தும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிகை நித்யா மேனன் உதவியால் எப்படி தனது காதலியை கண்டுபிடிக்கிறாரா? ஏன் சைக்கோ கும்பல் பெண்களை கடத்துகிறார்கள்? என்பது தான் இந்த படத்தின் மீதி கதை. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இதுவரை இல்லாத அளவில் மிக அற்புதமாக இந்த படத்தில் நடித்து உள்ளார். அவருடைய நடிப்பு ரசிக்க வைத்து உள்ளது.

நடிகை அதிதி ராவ் அவர்கள் சைக்கோ கொலைகாரன் இடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் தவிப்பு வேற லெவல்ல இருந்தது. இந்த படத்தில் நித்யா மேனனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு காட்சிகள் இல்லை என்றாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் மிகச் சரியாக நடித்து உள்ளார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ராம் நடித்து இருக்கிறார். இந்த படத்தை தூக்கி நிறுத்துவதே இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை தான். அற்புதமான பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக பார்க்கும் வகையில் செய்து உள்ளார் இளையராஜா.

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகள் எல்லாம் சூப்பர். திரில்லர் கதைகளத்தை கொண்டு இருந்தாலும் இந்த படத்தில் அதிகமாக வன்முறை காட்சிகள் தான் இருக்கிறது. இந்த படத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான். அந்தளவிற்கு கிரைமுக்கு பஞ்சம் இல்லை. படம் முழுக்க முழுக்க படமாக கிரைம், திரில்லர் தான் உள்ளது. இன்றைய காலத்து இளைஞர்களுக்கு இந்த சைக்கோ படம் விருந்து என்று சொல்லலாம்.

பிளஸ்:

படத்தின் நடிகர், நடிகைகள் எல்லாம் தங்களுடைய கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார்கள்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் சூப்பர்.

இளையராஜாவின் பிண்ணனி இசையில் பாடல்கள் அனைத்தும் வேற லெவல்.

கிளைமாக்ஸில் சொல்லப்படும் விஷயம் பிரமாதமாக உள்ளது.

வில்லனின் டீச்சராக நடித்து வரும் கதாபாத்திரம் அருமையாக உள்ளது.

பேய் படத்தில் கூட இப்படி ஒரு மிரட்டல் இருக்காது.

மைனஸ்:

படத்தில் போலீஸ் கொஞ்சம் திறமையாக செயல்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.

படத்தில் லாஜிக் எல்லாம் கொஞ்சம் சொதப்பல்.

அது மாறி வில்லன் எதற்காக பெண்களை கடத்தி கொலை செய்கின்றான். சைக்கோ என்றாலும் அதற்கான காரணத்தை தெளிவாக சொல்லாமல் உள்ளார் இயக்குனர்.

பெண்கள் குழந்தைகள் இந்த படத்தை பார்ப்பது தான் கொஞ்சம் சந்தேகம்.

இறுதி அலசல்:

பெண்களை கடத்தி கொலை செய்யும் வில்லனிடமிருந்து தன் காதலியை மீட்டு எடுக்கிறார் உதயநிதி ஸ்டாலின். படத்தின் கிளைமேக்சில் பேசப்படும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அற்புதமாக உள்ளது. மொத்தத்தில் சைக்கோ படம் சினிமா ரசிகர்களை கடத்துகிறது.

Advertisement