மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நடிப்பில் வெளியான ஜேம்ஸ் திரைப்படம் கர்நாடக திரை உலகில் கேஜிஎப் அடுத்து அதிகம் வசூல் சாதனை செய்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் பவர் ஸ்டாராக கொடி கட்டி பறந்தவர் புனீத் ராஜ்குமார். தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு இணையாக கன்னட மொழியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

இவர் கடைசியாக நடித்த ‘யுவரத்னா’ படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த வருடம் இவர் காலமான சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உடற்பயிற்சி செய்யும் போது திடீரென்று புனீத் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் புனித் ராஜ்குமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து இருந்தார்கள். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

புனித் ராஜ்குமாரின் மறைவு:

புனித் ராஜ்குமாரின் மறைவு கன்னடத்தில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச பள்ளிகளை கொடுத்திருக்கிறார். அதே போல 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலை போன்றவை தன்னுடைய சொந்தப் பணத்திலேயே மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். இவர் 1800 மாணவர்கள் படிப்பதற்காக வழிவகை செய்துள்ளார்.

புனித் செய்த சமூக சேவைகள்:

இப்படி இலவச பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என கர்நாடக மக்களுக்காக இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவ்வளவு ஏன் இறுதியாக அவர் இறந்த போது கூட அவர் கண்ணை தானாம் செய்துவிட்டு தான் சென்றார். அதுவும் அவர் தானமாக வழங்கி சென்ற கண்கள் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. மேலும், இதுவரை இவர் 46 படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த 47வது படம் தான் ஜேம்ஸ். இது தான் இவர் கடைசியாக நடித்த படம். இந்த படத்தின் ரிலீசுக்கு முன்னே புனீத் இறந்து விட்டார்.

Advertisement

புனித்தின் ஜேம்ஸ் படம்:

மேலும், இந்த படத்தை அவருடைய பிறந்த நாளான மார்ச் 17ஆம் தேதி வெளியானது. கர்நாடகாவில் மட்டும் ஜேம்ஸ் படம் 500 திரையரங்குகளில் வெளியானது. கன்னடம் தவிர தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் என பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு மொத்தம் 3,500 திரையரங்களில் ஜேம்ஸ் திரைப்படம் வெளியிடப்பட்டது. படம் வெளியான அன்று கர்நாடகாவில் அனைத்து திரை அரங்கம் நிரம்பி வழிந்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் திரண்டது. இதனால் ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

புனித்தின் ஜேம்ஸ் படம் செய்த சாதனை:

ஆனால், இதையெல்லாம் காண புனீத் இல்லை என்று அவருடைய ரசிகர்கள் திரையரங்கில் கண்ணீர் மல்க கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் புனித்தின் ஜேம்ஸ் திரைப்படம் இதுவரை 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் இதுவரை 100 கோடி வசூலை கேஜிஎப் திரைப்படம் தான் செய்தது. தற்போது கேஜிஎப் அடுத்து 100 கோடி வசூல் செய்து புனித்தின் ஜேம்ஸ் படம் சாதனை படைத்து உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் சந்தோஷத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement