“கர்ப்பமா இருக்கும்போது இப்படியா போட்டோ போடுவீங்க” உண்மை தெரியாமல் புஷ்பா பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்.

0
968
- Advertisement -

கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படி எல்லாம் ஃபோட்டோ போடுவீர்களா என்று பிரபல நடிகையை ரசிகர்கள் திட்டி வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனசுயா பரத்வாஜ். இவர் டிவி தொகுப்பாளராக தான் மீடியாவுக்குள் நுழைந்தார். பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் அனசுயா சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்குப்பின் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். பின் 2018 ஆம் ஆண்டு ராம்சரண், சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ரங்கஸ்தலம் படத்தில் அனசுயா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் அனசுயா நடித்திருந்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா. இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் படத்தில் பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

அனசுயா பரத்வாஜ் நடித்த படங்கள்:

ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து அனசுயா ஆச்சார்யா படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு காஜல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக திருவும், இசையமைப்பாளராக மணிசர்மாவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அனசுயா பரத்வாஜ் திரை பயணம்:

மேலும், இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். மம்முட்டி நடித்த பீஷ்ம பர்வம் என்ற படத்தின் மூலம் முதன் முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்தார் அனசுயா. ஆனால், இவர் ஏற்கனவே தெலுங்கில் மம்முட்டி நடித்த யாத்ரா படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் அமல் நீரத் இயக்கினார்.

அனசுயா பரத்வாஜ் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம்:

இந்த படத்தில் அனசுயா நடுத்தர வயதுப் பெண்ணாக ஆலிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறி இருந்தார்கள். ஆனால், அனசுயா அதை அறவே மறுத்து எந்த ஒரு பயோபிக் படத்திலும் நடிக்கவில்லை. குறிப்பாக சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இவர் படங்களில் குடும்ப பெண்ணாக அடக்கி வாசித்தாலும் சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு பஞ்சம் இல்லை. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

அனசுயா பரத்வாஜ்ஜை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்:

இதனால் அம்மணி அடிக்கடி எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கம். அதிலும் அனசுயா கண்ணா பின்னா கவர்ச்சியை காட்டி வந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் கடுப்பாகி கமெண்டுகளை குவித்து வருகின்றார்கள். அப்படி என்ன புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் என்றால், அனசுயா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவர் தன்னுடைய சுடிதாரை வயிற்றுக்கு மேல் தூக்கி கர்பமாக இருக்கும் வயிற்றை போட்டோ போட்டு காட்டியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா போட்டோ போடுவீங்க என்று கடுப்பாகி தீட்டி வருகிறார்கள். ஆனால், இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இப்போ வெளிவந்து இருக்கும் இந்த புகைப்படம் கடந்த வருடம் அவர் நடித்த படத்தின் போது எடுக்கபட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை தான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.

Advertisement