கிளாமர் குத்தாட்டத்தில் ரங்கஸ்தலம் சமந்தாவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா – வைரலாகும் வீடியோ.

0
2711
rashmika
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் ஸ்டைலிஷ் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. படத்தில் அல்லு அர்ஜுன் அவர்கள் லாரி டிரைவராக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார்.

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. புஷ்பா படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ரஷ்மிகாவின் சில காட்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் நடிகை ராஷ்மிகா மந்தனா படுகவர்ச்சியாக உள்ளார்.

- Advertisement -

இது சாமி சாமி என்கிற பாடலின் போது எடுக்கபட்ட புகைப்படம். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தற்போது இதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக நடிகை ராஷ்மிகா மந்தனா திகழ்ந்து வருகிறார். இவர் இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

இவர் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானார். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement