டான்ஸ் மாஸ்டர் செய்து காட்டிய Step கைதட்டி சிரித்த சம்மு – வெளியான ஊ சொல்றியா பாடலின் மேக்கிங் வீடியோ.

0
815
samantha
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சமந்தா பற்றி பல சர்ச்சைகளும், கருத்துக்களும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு சோசியல் மீடியா ஓபன் பண்ணினாலே சமந்தா பற்றிய செய்திகள் தான். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

சூப்பர் ஜோடிகளாக திகழ்வார்கள் என்று கருதப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. மேலும், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கருத்து பதிவிட்டு இருந்தார்கள். இதனால் அதிக மன உளைச்சல் ஆன சமந்தா தன் தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார்.

- Advertisement -

சமந்தா விவாகரத்து பிரச்சனை:

அப்போது எடுத்த புகைப்படங்களை எல்லாம் சோஷல் மீடியாவிலும் பகிர்ந்திருந்தார். மேலும், ஆன்மீக சுற்றுலாவிற்கு பின் சமந்தா படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும், நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

புஸ்பா படம்:

மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் சமந்தா அவர்கள் ‘ஊ சொல்லிறியா மாமா’ என்ற பாடலுக்கு பயங்கரமாக நடனம் ஆடி இருந்தார்.

-விளம்பரம்-

சமந்தாவின் ஐட்டம் பாடல்:

மிக பெரிய அளவில் இந்த பாடல் ஹிட் ஆனது. மேலும், எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் சர்ச்சியிலும் சிக்கியது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாட்டுக்காக மட்டும் சமந்தா 1.2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்தப் பாடல் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை கணேஷ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படப்பிடிப்பில் சமந்தா வீடியோ:

அந்த வீடியோவில் சமந்தா, அல்லு அர்ஜுன் இருவருக்கும் நடன இயக்குனர்கள் எப்படி ஆடுவது என்று சொல்லித் தருகிறார்கள். இதை பார்த்து சமந்தா வெட்கப்பட்டு சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமந்தா தற்போது காத்துவாக்குல 2 காதல், சாகுந்தலம் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement