பிரியாணி சாப்பிடத்துக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்த Trainer – புஷ்பவனம் குப்புசாமியின் டாக்டர் மகளின் Work Out வீடியோ.

0
227
pallavi
- Advertisement -

இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர்கள் புஷ்பவனம் குப்புசாமி- அனிதா. இருவரும் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த நாட்டுப்புற மக்களின் மனதையும் கவர்ந்தவர்கள். அதுமட்டும் இல்லாமல் புஸ்பவனம் குப்புசாமி தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாக பாடினர்கள். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

-விளம்பரம்-

குப்புசாமி – அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள், வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இவர்கள் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களையும் வழங்கி இருக்கிறார்கள். மேலும், அனிதா அவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து உள்ளார்.

- Advertisement -

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா பற்றிய தகவல்:

அதில் அவர் மாடித்தோட்டம், பூஜை அறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இவர்களுக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். அதில் மூத்த மகளின் பெயர் பல்லவி. இவர் பல் மருத்துவராக பணி புரிகிறார். இரண்டாவது மகள் மேகா. பல்லவிக்கும் , ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் கடந்த ஆண்டு இறுதியில் நிச்சயதார்த்தம் நடந்தது.

புஷ்பவனம் குப்புசாமி – அனிதா மகளின் திருமணம்:

அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலானது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் புஷ்பவனம் குப்புசாமி – அனிதாவின் மூத்த புதல்வியும், மருத்துவருமான பல்லவிக்கு கெளதம் என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள பிரபல லீலா பேலஸில் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இந்த பேலஸில் தான் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் விழாக்கள் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மணமக்களை வாழ்த்திய முதல்வர்:

மேலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வந்தது. அனிதா குப்புசாமி கடந்த 2013 இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அந்த நேரத்தில் அவர் ஜெயா டிவியில் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

வைரலாகும் அனிதா மகளின் திருமணம் புகைப்படம்:

பிறகு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2018ல் அனிதா அக்கட்சியில் இருந்து விலகினார். ஆனாலும், ஸ்டாலின் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அனிதா குப்புசாமி மகளின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தியது பெரிய விஷயம் என்று சோஷியல் மீடியாவில் பேசப்பட்டது. பல்லவி பாடகர், மருத்துவர், இன்ஃபுளூயன்சர், ஃபிட்னெஸ் ஆர்வலர் என பன்முகத்திறமை கொண்டவர். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பவர். அதில் பல்லவி, அதிகமா பிரியாணி சாப்பிட்டதுக்கு மங்கி டான்ஸ் வொர்க் அவுட் தண்டனை என ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

Advertisement