வேலை செய்த இளம் பெண்களை வீட்டில் அடைத்து வைத்தாரா புஷ்பவனம் குப்புசாமி ? CCTV கேமரால் வெளியான உண்மை.

0
822
pushpavanam

தனது வீட்டில் வேலை செய்த இளம் பெண்களை சம்பளம் கேட்டதால் வீட்டில் பூட்டி வைத்து காலில் விழ வைத்ததாக புஷ்பவனம் குடும்பத்தினர் மீது இளம் பெண்கள் புகார் கொடுத்த சம்பவத்தின் தொடர்பாக திடுக்கிடும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப் பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மனதையும் கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று உள்ளார். இவர் சென்னை பல்கலைக்கழக இசைத் துறையில் பயின்ற நாட்டுப்புற பாடகியான அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார்கள். அதில் மூத்த மகள் பெயர் பல்லவி. இவர் பல் மருத்துவராக பணி புரிகிறார். இரண்டாவது மகள் மேகா. புஷ்பவனம் குப்புசாமி பாடகராக மட்டுமல்லாமல், வீட்டின் அருகில் விஹா என்ற ஆர்கானிக் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இங்கு வேலை பார்த்து வந்த மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்த 18 வயது மற்றும் 17 வயது நிறைந்த சகோதரிகள் தங்களுக்கு வேலை செய்ததற்கான சம்பளத்தை கேட்டதற்கு வீட்டில் அடைத்து தங்களது தாயை வரச்சொல்லி மன்னிப்பு கேட்க வைத்து காலில் எனச் சொல்லி வெளியே செல்ல சொன்னதாக குற்றம் சாட்டியிருந்தது.

- Advertisement -

அதன்பின்னர் அந்த இரண்டு பெண்களும் போலீசில் புகார் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு இந்நிலையில் இந்த சம்பவத்தன்று வீட்டில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த இரண்டு பெண்களும் அளித்த புகார் போலி என்று தெரியவந்துள்ளது. உண்மையில் புதிதாக வேலைக்கு சேர்ந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வேலை செய்ததற்க்கு 200 ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்கள். புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா இருவரும் வெளியூர் இருந்த நிலையில் வீட்டில் அவர்களது மகன் மட்டும் இருந்திருக்கிறார். ஆனால், தங்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறைவாக இருக்கிறது என்று கூறி அந்த இளம் பெண்கள் தங்களுடைய அம்மாவை அழைத்து வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்கள்.

இதை தொடர்ந்து மறுநாள் வெளியூரில் இருந்து வந்துள்ள புஷ்பவனம் குப்புசாமி மற்றும் புஷ்பவனம் குப்புசாமி இருவரும் அந்த இரண்டு பெண்களையும் அவரது குடும்பத்தாரையும் வீட்டிற்கு வரவழைத்து போலீசார் முன்னிலையில் விசாரித்து உள்ளார்கள். ஆனால் உன்மையில் வேலைக்காக சேர்ந்துள்ள அந்த இளம் பெண்கள் கொடுத்த ஆதார் கார்ட் செராக்ஸ்ஸில் தங்களது பிறந்த வருடத்தை திருத்தி கொடுத்திருக்கிறார்கள். தனது 18 வயது நிரம்பாத அந்த பெண்களை வேலைக்கு வேண்டாம் என்று கூறியதால் அந்த பெண்களின் தாயார் அவர்களை அடித்து அனிதாவின் காலில் விழச் சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் அவர்களை வெளியில் செல்ல சொல்லியிருக்கிறார் அனிதா.

-விளம்பரம்-
Advertisement