தன் டாக்டர் மகளுக்கு திருமணத்தை முடித்த புஷ்வணம் குப்புசாமி – அதுவும் எங்கு நடைபெற்றுள்ளது பாருங்க.

0
1224
pushpavanamkuppusamy
- Advertisement -

பிரபல நாட்டுப்புற பாடகர் ஜோடியான புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியின் மூத்த புதல்விக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப் பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மனதையும் கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று உள்ளார். இவர் சென்னை பல்கலைக்கழக இசைத் துறையில் பயின்ற அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

இவருடைய மனைவி வேற யாரும் இல்லைங்க அனிதா குப்புசாமி. இவருடைய மனைவி அனிதா குப்புசாமியும் பிரபல பாடகி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து நிறைய மேடைகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை பாடி உள்ளார்கள். மேலும், இவர்கள் இருவருமே இணைந்து நிறைய நாட்டுப்புற பாடல்கள் இடம் கிராமியப் பாடல்களை எழுதி பாடி உள்ளார்கள். வெளிநாடுகளில் தமிழர்கள் நடத்தும் விழாக்களில் இவர்கள் தங்களுடைய இசை நிகழ்ச்சியை வழங்கி உள்ளார்கள்.

- Advertisement -

மேலும், இவர்களுக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போது இவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார்கள். அதில் மூத்த மகள் பெயர் பல்லவி. இவர் பல் மருத்துவராக பணி புரிகிறார். இரண்டாவது மகள் மேகா. இந்த நிலையில் புஷ்பவனம் குப்புசாமி – அனிதாவின் மூத்த புதல்வியும் மருத்துவருமான பல்லவிக்கு கெளதம் என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள பிரபல லீலா பேலஸில் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இந்த பேலஸில் தான் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் விழாக்கள் நடைபெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கெளதம் மற்றும் பல்லவி தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement