நடுரோட்டில் ஆண்களுடன் சேர்ந்து குயின்சி போட்ட குத்தாட்டம் வீடியோ – ஷாக்கில் வாயை பிளந்த ரசிகர்கள்

0
787
queency
- Advertisement -

நடுரோட்டில் ஆண்களுடன் சேர்ந்து குயின்சி குத்தாட்டம் போட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. மேலும், முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி எண்ட்ரியாகி இருக்கிறார். இந்த வாரம் தொடக்கத்தில் பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி நடந்து இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

அதில் ஜி பி முத்து இந்த வார தலைவர் ஆகியிருக்கிறார். மேலும், இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் குயின்சி ஸ்டான்லி. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின்பு ஆல்பம் சாங்ஸ், கவர் சாங்ஸ் போன்றவை மூலம் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் குயின்சி. அது மட்டும் இல்லாமல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் அன்பே வா தொடரிலும் குயின்சி நடித்திருக்கிறார்.

குயின்சி குறித்த தகவல்:

இதன் பிரபலத்தினால் இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு வந்தது. இவர் கருப்பு கண்ணாடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து விடியும் வரை காத்திரு என்ற படத்திலும் குயின்சி நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படி மீடியாவில் பிரபலமான குயின்சிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ ஷூட் புகைப்படம், வீடியோக்கள் என ஏதாவது ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருப்பார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் குயின்சி:

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாலோ செய்கிறார்கள். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து குயின்சியிடம் அசல் நடந்து கொள்ளும் முறை ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. கடந்த வாரம் குயின்சி, விக்ரமனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது குன்சியின் கையை மாவு பிசைவது போல அசல் பிசைந்து இருந்தார். இது குயின்சிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

குயின்சியின் நடன வீடியோ:

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு பெண்ணுக்கு பிடிக்காத செயலை செய்வது ரொம்ப தவறான ஒன்று என்று அசலை கண்டித்து பேசி இருந்தார்கள். தற்போது குயின்சி குறித்த விஷயங்களை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தேடி வருகின்றனர். அந்த வகையில் குயின்சி நடன வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. குயின்சிக்கு சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் சமீபத்தில் குலசை தசரா விழாவிற்காக தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். அங்கு நடன குழு உடன் இணைந்து நடுரோட்டிலேயே ஆண்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார்.. அந்த வீடியோவை தான் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்

Advertisement