தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தகுதியுடையவர் பட்டியலில் விஜய்க்கும் ஒரு நிச்சய இடமுண்டு. விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் படம் மத்தியில் வரவேற்பைபெற்றது. மேலும், சர்வதேச அரங்கில் சிறந்த படமாகவும் அங்கீகாரம் பெற்றது.

அதே போல இந்த படத்தில் நடித்த விஜய்க்கு சர்வேதேச அளவில் சிறந்த விருதும் கிடைத்தது. இந்நிலையில் விஜய் பற்றி தமிழக பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் International achievement recognition விருதுகள் 2014ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது. 2018ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது யாருக்கு வழங்கப்பட்டது? என்ற கேள்வியும் அதன் பதிலான விஜய்யின் மெர்க்சல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க : மெர்சல் படத்திற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது.!

Advertisement

விஜய் சம்மந்தபட்ட பள்ளி பாட புத்தகத்தில் இடம்பெறுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் விஜய்யின் ‘மெர்சல்’ படம் இடம்பெற்றிருந்தது. மெர்சல் படத்தில் மருத்துவத்துறை சம்பந்தமான விருது வழங்கும் விழாக் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும்.

வெளிநாட்டில் நடைபெற இருக்கும் அந்த விழாவுக்கு விஜய் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில் கிளம்புவார். அதற்காக அவர் விமான நிலைய செல்லும் போது அதிகாரிகள் அவரை உள்ளாடையுடன் சோதனை செய்வார்கள். அதன் பின் அவரை அறிந்த அதிகாரிகள் தவறை புரிந்து கொண்டு மதிப்பளிப்பார்கள். த

Advertisement

னக்கு நடந்த அவமதிப்பிற்காக விஜய் தமிழர்களின் உடையான வேட்டி சட்டை மதிப்புகளை எடுத்து விளக்குவார். அந்தப் புகைப்படம்தான் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பாடத்தில் வரும் தகவலுக்காக அவரை பாடநூல் தயாரிப்புக் குழு ஒரு மாடலாக பயன்படுத்தி இருக்கிறது.

Advertisement
Advertisement