இங்கிலாந்தில் கையில் கோப்பை..!கோட் ஷூட்..!விஜய்யின் மாஸ் புகைப்படம்..!

0
1676
- Advertisement -

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச ப்ரோமோஷனால் சர்வதேச அளவில் இந்த படம் கவனத்தை ஈர்த்தது.

-விளம்பரம்-

சர்வதேசக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை `சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA)’ என்ற அமைப்பு 2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் மெர்சல் திரைப்படத்துக்காகச் சிறந்த நடிகர், சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார் நடிகர் விஜய். இதில் சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை அவர் பெறுவதாக செப்டம்பர் மாதம் அறிவித்தது IARA.

 இப்போது இந்த விருதை இங்கிலாந்து சென்று பெற்றுள்ளார் நடிகர் விஜய். கோட் சூட்டுடன் விருது வாங்கிய தளபதி விஜய்யை கிளிக் செய்து அந்தப் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளது IARA-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம். இந்தப் புகைப்படத்தை பெருமளவு பகிர்ந்துவருகின்றனர் நடிகர் விஜய்யின் ரசிகர்கள். இந்த போட்டோ இப்போது ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement