படத்திற்காக கட்டுமஸ்தான உடல் அமைப்பிற்கு மாறிய ஆர் கே சுரேஷ். வைரலாகும் புகைப்படம்.

By Rajkumar · 24/11/2019

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள் அதேபோல ஒரு சில நடிகர்கள் தங்களது பலத்தை தாங்களே தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர் ஆனால் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விடிவு சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.

மேலும், தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மக்க கலங்குதப்பா என்ற பாடலிலும் தோன்றியிருந்தால் ஆர்கே சுரேஷ். பாலா இயக்கத்தில் வெளியான 'தாரா தப்பட்டை' விஷால் நடிப்பில் வெளியான 'மருது' போன்ற படத்தில் வில்லனாக மிரட்டிய ஆர் கே சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான 'பில்லா பாண்டி' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தினை விஜய் நடிப்பில் வெளியான 'சர்க்கார்' படத்திற்கு போட்டியாக வெளியிறிருந்தார் ஆர் கே சுரேஷ். ஆனால், பில்லா பாண்டி படம் பெரும் தோல்வி அடைந்தது.

இதையும் பாருங்க : விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சீமா ராஜா பட துணை நடிகை.

இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் ஆர் கே சுரேஷ். தற்போது மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள ஆர் கே சுரேஷ் 'வன்முறை' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஆர் கே சுரேஷ் போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது உடலை மெருகேற்றியுள்ளார். இந்த படத்தினை மஞ்சித் திவாகர் என்பவர் இயக்கியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=PLmyY-IiXnA

துப்பறியும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக அமைந்துள்ள இந்த படத்தில் இப்படத்தில் சுரேஷுடன்,  சார்மிளா, நேஹா சக்ஸேனா, வினோத் கிஷன்,  அக்ஷிதா ஸ்ரீதர், ஆடம் லீ, அபூபக்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு பிட்டானா போலீஸ் அதிகாரியாக தோன்றி அசத்தியுள்ளார் நடிகர் ஆர் கே சுரேஷ்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full