கரண்ட் ஷாக் சிகிச்சை எடுத்துக்கொண்ட லட்சுமி ராய் – எதுக்காகனு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.

0
2762
lak
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராய் லட்சுமி. நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தின் மூலம் தான் ராய் லட்சுமி தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தாம் தூம், அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ராய் லட்சுமி அவர்கள் தமிழ் மொழியில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் இவர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பொதுவாக சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்க்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு ராய் லட்சுமி அவர்கள் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. இந்த படத்தில் நடிகை ராய் லட்சுமி அவர்கள் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார். இருந்தும் அதெல்லாம் பயனில்லாமல் போனது. அதுமட்டுமில்லாமல் லிப் லாக் காட்சிகளில் கூட நடித்திருந்தார் அம்மணி. மேலும், நடிகை ராய் லட்சுமி அவர்கள் சமீபத்தில் உதட்டை அழகு ஆக்குகிறேன் என்ற பெயரில் பிளாஸ்டிக் சர்ஜரி கூட செய்திருந்தார் என்று சர்ச்சைகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ராய்லட்சுமி தனது உடலை பிட்டாக வைத்துக்கொள்ள ஷாக் ட்ரீட்மெண்டை எடுக்கத்துவங்கி இருக்கிறாராம். Electric Stimulation என்று கூறப்படும் ப்ரத்யேக கவசம் அணிந்து உடற் பயிற்சி செய்து வருகிறார். உடற் பயிற்சி செய்யும் போது அந்த கவசத்தில் இருந்து மின்சாரம் உடலுக்கு பாயும். இதனால் 20 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய முடிவதாகவும். ஆனால், இது கடுமையான 3 செட் உடற் பயிற்சிக்கான பலனை தரும் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement