தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்ப படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்தாலும் பின்னர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில், சுபாஷ்கரன் தயாரிப்பில் நடிகை திரிஷா நடித்துள்ள திரைப்படம் ராங்கி. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்படம் இன்று வெளியாகிய நிலையில் எப்படி இருக்கிறது? என்பதை பாப்போம் வாருங்கள்.

கதைக்களம் :

திரிஷா தையல் நாயகி என்ற கதாபாத்திரத்தில் துணிச்சலான பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். இந்த நிலையில் பல சோசியல் மீடியாக்களில் ஒன்றான பேஸ்புக்கில் போலி கணக்கை உபயோகித்து ஒரு பெண் ஆண்களுடன் பேசி வருகிறார். அந்த கணக்கின் ஃப்ரோபைல் பிச்சரில் திரிஷாவின் தங்கையின் புகைப்படம் இருக்கிறது. இதனை கவனித்த திரிஷா அந்த கணக்கில் பேச தொடங்குகிறார். அதில் ஒருவர் தீவிரவாதி எனவே தன்னுடைய தங்கையை பிரச்னையில் இருந்து காப்பாற்ற திரிஷா அந்த கணக்கில் பேசும்போது பல திருப்பங்கள் ஏற்ப்படுகின்றன. இதிலிருந்து எப்படி திரிஷா வெளியில் வந்தார், யார் அந்த தீவிரவாதிகள் என்பதுதான் மீதி கதை.

Advertisement

படத்தின் பெயருக்கு கேற்றார் போல் திரிஷா தான் ஒரு முன்னணி நடிகை என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். தொழில்நுட்பம், அரசியல், காதல் என பல விதமான கருத்துக்கள் வந்தாலும் அதனை சரியாக பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் இணயத்தளத்தின் மூலம் செய்யும் குற்றங்களினால் மற்றவர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்தும், பத்திரிக்கை துறையை பற்றி கேள்வி எழுப்பிவதும், அரசியலை கடுமையாக விமர்சிப்பதுவுமாக இருக்கிறது.

இரண்டாம் பாதியில் தற்போது அரசியல் உள்ள நிலை, காதல், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு சாதாரண மனிதன் எப்படி தீவிரவாதியாக மாற்றப்படுகிறான் என்பதை மிகவும் நுட்பக்காக காட்சிப்படுத்தி படத்தை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் பேசப்பட்ட வசனங்கள் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்த்து. அதில் “தீவிரமாக அரசியல் செய்பவன் அரசியல்வாதி”, “தீவிரமாக போராடுபவன் தீவிரவாதி.” வென்றால் போராளிகள் தோற்றால் தீவிரவாதிகள் போன்ற வசனங்கள் மிரள வைக்கின்றன.

Advertisement

அதே போல இப்படத்தில் ஏ ஆர் முருகதாஸின் கதை ,இசையமைப்பாளர் சந்தியாவின் பின்னணி இசை, ஹாலிவுட் படத்திற்கு இணையான ஒளிப்பதிவு என அணைத்து துறைகளிலும் படக்குழுவினர் தங்களுடைய உழைப்பை காட்டியுள்ளது படத்தில் நன்றாகவே தெரிகிறது. நடிகை திரிஷா தனி கதாநாயகியாக நடித்த திரைப்படங்கள் அந்த அளவிற்கு ஹிட் ஆகாதா நிலையில் இப்படம் மட்டும் சரியான நேரத்தில் திரைக்கு வந்திருந்தால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடித்திருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து.

Advertisement

நிறை :

திரிஷாவின் நடிப்பு பிரமாதம்.

ஒளிப்பதிவில் ஒவவொரு ஃபிரேமிலும் செதுக்கி இருக்கிறார் சக்திவேல்.

பின்னணி இசை அற்புதம்.

படத்தில் பேசப்படும் வசனங்கள் கதைக்கு பலம்.

குறை :

சுவாரஸ்யமான கதையாக இருந்தாலும் சில இடங்களில் சொதப்பி இருக்கின்றனர்.

தாமதமாக வந்த படம்.

மொத்தத்தில் திரிஷா நடித்த “ராங்கி” திரைப்படம் ரசிக்க மட்டும் வைக்க வில்லை சிந்திக்கவும் வைத்திருக்கிறது.

Advertisement