இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ராட்சசன்”. இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபால், ராதாரவி, காளி வெங்கட், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபாலுக்கு அடுத்த படியாக சிறப்பாக வளம் வந்தவர் அம்முவாக நடித்த அபிராமி.

தனது முதல் திரைப்படமான “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும், ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தனது அழகால் கவர்த்திழுத்தவர். அதே போல இந்த படத்தில் அம்மு அபிராமியின் பள்ளித் தோழியாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா. மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : பிறந்து இரண்டு வாரத்தில் இறந்த மூத்த மகள் – டிஷ்யூம், காவலன் பட நடிகர் பக்ரு வாழ்வில் ஏற்பட்ட சோகம்.

Advertisement

அதே போல இவர் ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் வெடி குண்டால் ஒரு இடம் வெடித்து தீப்பற்றி எரியும். அந்த இடத்தில் இருந்து ஒரு பெண் குழந்தை மேலே இருந்து விழும். அந்த குழந்தையை தளபதி விஜய் அவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பார்.அந்த குழந்தை தான் ரவீனா தஹா என்று பலரும் அறியாத ஒன்று.

தற்போது ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்து தன் திறமையை காண்பித்து வருகிறார். சமீபத்தில் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement
Advertisement