இயக்குனர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா. இந்த படத்தில் மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்கியராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் ஒரு காட்சியில் வெடி குண்டால் ஒரு இடம் வெடித்து தீப்பற்றி எரியும். அந்த இடத்தில் இருந்து ஒரு பெண் குழந்தை மேலே இருந்து விழும். அந்த குழந்தையை தளபதி விஜய் அவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துவார்.
அந்த வெடிகுண்டு வெடித்த நிகழ்வுக்குப் பிறகு தான் விஜய் அவர்கள் நல்ல போலீஸ் அதிகாரியாக மாறி குற்றவாளிகளை தண்டிப்பார். அந்த குழந்தை வேற யாரும் இல்லைங்க ரவீனா தாஹா தான். இவர் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படத்தில் இவர் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகினர்.
தற்போது ரவீனா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சி என பலவற்றிலும் கலந்து தன் திறமையை காண்பித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஜில்லா படத்தில் நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
இதை பார்த்து பலரும் தளபதி படத்தில் நடித்தது ரவீனாவா!! இது என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள். தற்போது தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. தற்போது ரசிகர்கள் எல்லோரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.