விவாகரத்துக்கு பின் புதிய சீரியலில் கமிட் ஆன ரஷிதாவின் கணவர் - எந்த சேனலில் தெரியுமா ? (இவரையும் விஜய் டிவி சேத்துக்கலயா ? )

By Arun · 8/7/2022

நடிகை ரக்ஷிதாவின் கணவர் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

அதன் பின் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. இதுவரை கதாநாயகியாக இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடிகை ரக்ஷிதா நடித்து இருக்கிறார். தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்திலும் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை நோக்கி வந்து விட்டார்.

இதையும் பாருங்க : சமந்தாவை மிஸ் செய்கிறாரோ? நாக சைதன்யா பதிவால் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்- என்ன போட்டு இருக்காருன்னு பாருங்க

நாம் இருவர் நமக்கு இருவர் 2 :

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து சமீபத்தில் முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார். ஆனால், இந்த தொடரில் இருந்து இவர் திடீரென்று விலகிவிட்டார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறார். திருமணமாகி கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் வாழும் பெண்ணின் கதை.

இது சொல்ல மறந்த கதை:

தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள், பெண்களை தவறாக பார்க்கப்படும் கண்ணோட்டத்தில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது. பெண்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதை அமைந்துள்ளது. இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

ரக்ஷிதா விவாகரத்து:

இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட ரக்ஷிதா தங்களுடைய பிரிவு குறித்து கூறியிருந்தார். மேலும், ரக்ஷிதா கணவனின் பெயர் தினேஷ். இவர் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான பூச்சூடவா சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

ரீ-என்ட்ரி கொடுக்கும் தினேஷ்:

அதற்கு முன் இவர் விஜய் டிவி சீரியலில் நடித்து இருக்கிறார். பின் இவர் தன்னுடைய மனைவி ரக்ஷிதாவுடன் இணைந்து நாச்சியாபுரம் என்ற சீரியலில் நடித்து இருந்தார். அந்த சீரியலுக்கு பிறகு இவர்கள் பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் தினேஷ் மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் தினேஷ் கமிட்டாகியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full