14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசி.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

By Rajkumar · 11/5/2019

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை துளசி நாயர். இவர், கோபடத்தில் நடித்த கார்த்திகாவின் சகோதரியும் மாஜி நடிகை ராதாவின் மகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 14 வயதிலேயே சினிமாவில் அறிமுகமான இவர், நிஜமாகவே, இந்த பொண்ணுக்கு 14 வயசு தானா என்று ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். கௌதம் கார்த்திக்கின் கடல் படத்தை தொடர்ந்து ஜீவாவின் 'யான்' படத்திலும் நடித்திருந்தார்.

தனது முதல் படமான கடல் படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். ஆனால், யான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. அதன் பின்னர் பட வாய்ப்புகளும் இவருக்கு வந்த வண்ணம் இல்லை.

14 வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் படிப்பை தொடரமுடியாமல் திணறினார்.
இதனால் தனது படிப்பை முடித்து விட்டு நடிக்க வரலாம் என்று படிப்பில் கவனம் செலுத்து சென்றுவிட்டார். தற்போது மும்பையில் தனது கல்லூரி படிப்பை படித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full