கே ஆர் விஜயா எல்லாம் அம்மன் வேஷம் போட்ட கையெடுத்து கும்பிட தோனும், ஆன இந்த ஜூலி – வெளுத்து வாங்கிய ராதாரவி.

0
700
radharavi
- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.

-விளம்பரம்-

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இருப்பினும் இவர் மீதான வெறுப்பு சற்றும் குறையவில்லை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தான் ஜூலி சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதில் டேமேஜ் ஆன தன்னுடைய பெயரை மீண்டும் சரி செய்துகொண்டார் ஜூலி. பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்ட பிறகு ஜூலி, அம்மன் தாயி என்ற படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தின் ட்ரைலர் கூட அப்போது வெளியாகி இருந்தது. அதை கண்ட பலரும் ஜூலியை கேலி செய்து இருந்தனர்.

ஆனால், இந்த படம் இன்னும் கூட வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ராதாரவி, பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் ஜூலி குறித்தும் பேசி இருக்கிறார். அதில் எவனோ ஒருத்தன் செய்தான் என்று அதை இந்தியில் கொண்டு வந்து பின் தமிழில் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதை திருவிழா கக்குஸ் ஆக்கிவிட்டார்கள். கமல் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட மாட்டார். அப்படியே கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன்.

-விளம்பரம்-

அவர் படத்தில் நடிக்க கூப்பிட்டால் போவேன். அவர் வீட்டிற்கு கூப்பிட்டால் போவேன் தவிர பிக் பாஸ்க்கு போக மாட்டேன்.ஆரம்பத்தில் வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் ரகசியமாக வெளியே வராமல் வைத்திருந்தார்கள் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது எல்லோருமே வராங்க போறாங்க. மார்க்கெட் மாறி ஆகிவிட்டது. சினிமா பிரமோஷனுக்கெல்லாம் உள்ளே போய்விட்டு வருகிறார்கள்.

அதேபோல் போராட்டத்தில் கத்திய அந்த பெண் ஜூலி அம்மன் வேஷம் போட்டு ஒரு படத்தில் பண்ணி இருக்கு. அம்மன் என்றால் கே ஆர் விஜயா போன்ற சில நடிகைகளை சொல்லலாம். அவர்களை பார்க்கும்போது கையெடுத்து கும்பிட தோணும். ஆனால், இந்த ஜூலி பொண்ணு அம்மன் வேடம் போட்டிருக்கு. போடட்டும் அம்மன் என்ன கண்ணய்யா குத்தப்போகுது. கருமம் என்னத்த சொல்லுவது என்று கூறியுள்ளார்.

Advertisement