மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி – வெளுத்து வாங்கிய குஷ்பூ, ராதிகா சரத்குமார்

0
357
- Advertisement -

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை குஷ்பூ, ராதிகா வெளுத்து வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மோசமான வார்த்தைகளை பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் ஆன குஷ்புவை மோசமாக தவறாக பேசியிருந்தார்.

-விளம்பரம்-

இதனால் கொந்தளித்து போன குஷ்பூ, கிருஷ்ணமூர்த்தி மீது புகார் அளித்து இருந்தார். பலரும் குஷ்பூவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். மேலும், குஷ்புவை குறித்து மோசமாக பேசிய வழக்கில் கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் கைது செய்திருந்தது. அதற்கு பிறகு அவர் ஜாமீனில் இருந்தும் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த பிறகு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய செயலை நினைத்து வருத்தப்படுவதாக மன்னிப்பு கேட்டிருந்தார்.

- Advertisement -

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி செய்த வேலை:

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுதிருந்தார். இதை அடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சரத்குமாரை விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு நடிகையும், பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார், ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே அவங்கள தான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும் என்று கூறி இருந்தார்.

சர்ச்சையில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி :

இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இவர் மற்றவர்களை அவதூறாக விமர்சித்து பேசிய வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு குஷ்பூ, நாய் வாலை நிமிர்த்த முடியாத ஒரு பழமொழி இருக்கிறது. இந்த மனிதன் அதே மாதிரிதான். மீண்டும் பெண்களை ரொம்பவே புண்படுத்தும் வகையில் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். முதல்வர் மு க ஸ்டாலினும் அவரை சஸ்பெண்ட் மட்டும் தான் செய்கிறார்.

-விளம்பரம்-

குஷ்பூ பதிவு:

காரணம், அவர்களை மகிழ்விக்க இந்த மாதிரி மனிதர்கள் தேவை. நான் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்கிறேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கான கடுமையான பாடத்தை அவருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த மாதிரியான ஆண்கள் அவர்களுடைய வளர்ப்பை காட்டுகிறது. தமிழிசை அவர்கள் அனைவராலும் மதிக்கப்படுபவர். எங்கள் பாஜக குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கிறார்கள்.

ராதிகா பதிவு:

எலும்புக்கூடுகள் அலமாரியிலிருந்து விழ ஆரம்பித்தால் இந்த முட்டாள்களுக்கு தங்கள் அசிங்கமான முகங்களை எங்கு மறைப்பது என்று தெரியாது. திமுகவில் பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார். இவரை தொடர்ந்து நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான ராதிகா சரத்குமார், இது குறித்து நாங்கள் ஏற்கனவே திமுக தலைவர்களிடம் பேசினோம். அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினோம். திமுகவில் பிரச்சாரம் செய்ய குறைவான காசு கொடுப்பதால் இவரை போன்ற ஊழல்வாதிகளை வைத்து இருக்கிறார்கள். இவரைப் போன்ற ஊழல்வாதிகள் தன்னுடைய பொதுக் கழிப்பறை வாயை அம்பலப்படுத்த அனுமதிப்பது மிகுந்த அவமரியாதையை காட்டுகிறது என்று கூறியிருக்கிறார்

Advertisement