லாக் டவுன் பிடித்திருக்கிறது – கடலில் ஸ்விம் சூட் உடையில் கபாலி பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.

0
3919
radhikaapte

ஹிந்தி திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘வாஹ்! லைஃப் ஹோ தோ ஐஸி!’. இந்த படத்தினை இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கியிருந்தார். இதில் பிரபல நடிகை ராதிகா ஆப்தே ‘அஞ்சலி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தான் ராதிகா ஆப்தே அறிமுகமான முதல் ஹிந்தி திரைப்படமாம். இதனைத் தொடர்ந்து பெங்காலி மொழியில் ‘அன்டாஹீன்’ மற்றும் மராத்தி மொழியில் ‘சமாண்டர்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் ராதிகா ஆப்தே.

அதன் பிறகு ஹிந்தியில் சில படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, ஹிந்தி – பெங்காலி – மராத்தி மொழி திரைப்படங்களுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்தார். ஆகையால், அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார் ராதிகா ஆப்தே. 2012-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளி வந்த திரைப்படம் ‘தோனி’. இது தான் நடிகை ராதிகா ஆப்தே தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படமாம்.

- Advertisement -

‘தோனி’ படத்துக்கு பிறகு ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச் செல்வன், கபாலி, சித்திரம் பேசுதடி 2’ என அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடித்தார் நடிகை ராதிகா ஆப்தே. இதில் ‘கபாலி’ திரைப்படம் ராதிகா ஆப்தேவிற்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், அந்த படத்தில் ஹீரோவாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்தினை பிரபல இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியிருந்தார்.

நடிகை ராதிகா ஆப்தேவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான தனது ஸ்டில் ஒன்றை ஷேர் செய்துள்ளாராம். பிகினி உடையில் ராதிகா ஆப்தே கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Advertisement