தன் சக்காளத்தி ராதிகாவுடன் சேர்ந்து போட்ட செம குத்தாட்டம் போட்ட பாக்கியா – அதுவும் எந்த பாட்டுக்கு பாருங்க.

0
503
radhika
- Advertisement -

ராதிகா மற்றும் பாக்கியா சேர்ந்து மரண குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள எல்லா பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அதிலும், கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி வேற லெவலில் எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம், சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான். சீரியலில் பாக்கியா- கோபிக்கு விவாகரத்து ஆகி விடுகிறது. பின் கோபி அவர் ஆசைப்பட்ட மாதிரி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபியின் மொத்த குடும்பமுமே கோபி மீது கோபத்தில் இருக்கிறது.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில், இனியா வீட்டில் உள்ள எல்லோருடனும் சண்டை போட்டு கோபி வீட்டிற்கு சென்று விடுகிறார். இதனால் பாக்யா வீட்டில் உள்ள எல்லோருமே கவலையில் இருக்கிறார்கள். பின் கோபியின் அப்பா ராமமூர்த்தி இனியாவை அங்கே விடக்கூடாது என்று கோபியின் வீட்டிற்க்கே வந்து தங்குகிறார். ஆனால், இதை எல்லாம் பார்த்து ராதிகாவுக்கு பிடிக்காமல் கோபி மீது கோபப்படுகிறார். ராமமூர்த்தி, ராதிகா செய்த சமையலை கிண்டல் செய்கிறார். இப்படி ராமமூர்த்தி-ராதிகாவிடம் மாட்டி கொண்டு கோபிப்படும் பாடு என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-
Reshma

ரேஷ்மா குறித்த தகவல்:

மேலும், இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் முதலில் தெலுங்கு சீரியல்களில் தான் நடித்திருந்தார். அதற்கு பின்பு தமிழில் வெளிவந்த படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து வருகிறார். ரேஷ்மா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

செம குத்தாட்டம் போட்ட ராதிகா-பாக்கியா:

இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ ஷூட் புகைப்படம், வீடியோக்கள் எல்லாம் பகிர்ந்து வருவார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது ரேஷ்மா வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஜிபி.முத்து, சாண்டி இருவரும் இணைந்து நடித்த வலைய எடுத்து வீசு என்ற பாடலுக்கு தான் நடனமாடி இருக்கிறார்கள். அதில் ராதிகாவுடன் பாக்கியா, செல்வி ஆகிய மூவரும் சேர்ந்து சேலையில் செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement