கையில் சுருட்டுடன் நடிகை ராதிகா கொடுத்த போஸ்.! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

0
858
Radhika
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா. சினிமா பின்னணி கொண்ட பிரபலமாக இருந்தாலும் இவரது தனிப்பட்ட சிறப்பான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் ராதிகா.

-விளம்பரம்-

ராதிகா திரையுலகுக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன.  வெற்றிகரமாக கிழக்கே போன ரயில், இந்த நாற்பதாண்டுகளில் அரசியல், சினிமா, சின்னத்திரை என்று சகல திசைகளிலும் பயணம் செய்து சாதித்திருக்கிறது. வாணி-ராணி தொடரில் இரட்டை வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த இந்த நடிகவேளின் வாரிசு, சமீபத்தில் `சந்திரகுமாரி’ சீரியலில் வரலாற்று நாயகியாகப் புது அவதாரம்எடுத்தார்.

இதையும் பாருங்க : ஊறுகாய் தொழிலை ஆரம்பித்த ராஜா ராணி சீரியல் நடிகை.! யாருனு பாருங்க.! 

- Advertisement -

மேலும், சினிமாவிலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது பிக் பாஸ் புகழ் ஆரவ்வுடம் புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு மார்க்கெட் ராஜா என்று தலைப்பை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (மே 1) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நார்காலியில் அமர்ந்திருக்கும் ராதிகா கையில் சுருட்டுடன் போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement