மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இதனால் தான் எடுத்துவிட்டேன் – மனம் திறந்த ராகவா லாரன்ஸ்

0
357
- Advertisement -

மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நிராகரித்ததற்கான காரணம் இதுதான் என்று ராகவா லாரன்ஸ் வெளிப்படையாக அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடைய பெயருக்கு முன்னாடி பட்ட பெயர் வைப்பது வழக்கம். இந்த பெயரை பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் கொடுப்பார்கள். எம்ஜிஆர் தொடங்கி தற்போது இருக்கும் சிவகார்த்திகேயன், தனுஷ் வரை ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பட்டப் பெயர் இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. இந்த பெயர் மொட்ட சிவா கெட்ட சிவா என்ற படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், அதற்கு பின்பு ராகவா லாரன்ஸ் அந்த பட்டத்தை நீக்கி இருக்கிறார். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பது, மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் தான் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் எனக்கு கொடுத்தார்கள்.

- Advertisement -

ராகவா லாரன்ஸ் பேட்டி:

ஆனால், அந்தப் பெயரை பார்த்து ரஜினி ரசிகர் வருத்தப்பட்டார்கள். கிண்டல் கேலி செய்தார்கள். சூப்பர் ஸ்டார் இருக்கும்போது உனக்கு எதுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம்? இதெல்லாம் தப்பு இல்லையா? என்றெல்லாம் மோசமாக விமர்சித்து இருந்தார்கள். அந்த நேரத்தில் எனக்கு சரியான பக்குவமும் கிடையாது. இதனால் நான் ரொம்ப டென்ஷன் ஆனேன். நமக்கு சூப்பர் ஸ்டாரை பிடிக்கும், மக்களுக்கும் நாம் நல்லது செய்கிறோம்.

மக்கள் சூப்பர் ஸ்டார் சர்ச்சை:

அதனால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போடுவதில் என்ன தவறு? இது அப்பா பேரை சேர்த்தது போல தானே இருக்கிறது. இதில் என்ன தப்பு? எல்லோரும் ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றெல்லாம் யோசித்தேன். பிறகு நான் இயக்குனர் சாய் ரமணியை அழைத்து, அதை நீங்கள் விருப்பப்பட்டு போட்ட மாதிரி சொல்லி விடுங்கள். ரொம்ப தப்பு தப்பா பேசுகிறார்கள் என்று சொன்னேன். பின் வீட்டிலும் என் அம்மாவிடம் இதைப்பற்றி வருத்தப்பட்டு பேசினேன்.

-விளம்பரம்-

வருத்தப்பட ராகவா:

அவரும் உன்னுடைய தலைவன் பெயரை தானே சேர்த்துக் கொண்டாய். இதில் என்ன தவறு என்று கேட்டார். அதற்கு நான், ரொம்ப தப்பா பேசி விட்டார்கள். இனி அது இருக்க வேண்டாம் என்று சொன்னேன். அதற்குப் பிறகுதான் அந்த பெயரை நீக்கி விட்டேன் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக மட்டும் இல்லாமல் நடன இயக்குனராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சந்திரமுகி 2.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, நிமிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Advertisement