பிரபுதேவா மாதிரி இருந்ததால் தான் விக்கிய நயன் காதலித்தார் - சர்ச்சையை கிளப்பிய நானும் ரௌடி தான் பட நடிகர்.

By Rajkumar · 1/8/2022

தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்-விக்கி. இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஷயமாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி படு கோலாகளமாக நடைபெற்றது. நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கும் முன்னர் சிம்பு மற்றும் பிரபுதேவாவை ஆதரித்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான் ஆனால் இந்த இரண்டு காதலுமே தோல்வியில் முடிந்தது

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்கிய இரண்டாவது படம் நானும் ரௌடி தான். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் 'நானும் ரௌடி தான் ' படத்தின் போது தான் பற்றிக்கொண்டது என்பது பலருக்கும் தெரியும். இப்படி ஒரு நிலையில் பிரபுதேவா போன்று இருப்பதால் தான் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் மீது காதல் வந்தது என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் ராகுல் தாத்தா.

இதையும் பாருங்க : பறை இசைக்கு பேரறிவாளனுடன் செம்ம குத்தாட்டம் போட்ட சத்யராஜ் - வைரலாகும் வீடியோ.

ராகுல் தாத்தா அளித்த பேட்டி :

நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் ராகுல் தாத்தா. இவரது உண்மையான பெயர் உதயபானு இவர் தமிழ் சினிமாவில் 48 ஆண்டு காலத்திற்கு மேலாக இருந்து வருகிறார். சமீபத்தில் நிறைவடைந்த குக்கு வித் கோமாளி சீசன் 3யிலும் ராகுல் தாத்தா போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் நயன்தாரா - விக்கி காதல் கதை குறித்து கூறியுள்ளார்.

நானும் ரவுடி தான் அனுபவம் :

நானும் ரவுடிதான் படம் சூட்டிங் போது அந்த முட்டையறியும் காட்சியில் அவர்கள் முட்டையை எரியும் போது அதை சரியாக கேட்ச் பண்ணி நான் திருப்பி எறிய வேண்டும் முட்டையை விட்டு விட்டேன் என்றால் முட்டை முஞ்சில் அடித்த ஷார்ட் வேஸ்ட் ஆக போய்விடும். எல்லோரும் விக்கியிடம் இவர் பண்ணிடுவாரா என்று கேட்பார்கள் பண்ணி விடுவார் அவரை வச்சிதான் எழுதியிருக்க அவர் அதெல்லாம் பன்னிவிடுவார் என சொல்லுவார்.

விக்கி - நயன் காதல் :

படம் சூட்டிங் போது சீன்களை எடுத்து முடித்தவுடன் நயன்தாரா பார்த்திபன் விக்கி விஜய் சேதுபதி வாங்க ராகுல் மானிட்டர் பாருங்கள் என்று என்னை கூப்பிடுவார்கள். மானிட்டரை பார்த்துக் கொண்டே பேசுவார்கள் இந்த படம் வெளியாகும் போது இவர்தான் நம்மை இல்லம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டு போக போறார் என்று கூறுவார்கள்.அதே மாதிரி படம் வெளியாகும் போது எனக்கு பெரிய பரிசாக அமைந்தது.

பிரபுதேவா லுக்கில் தான் காரணம் :

அது மட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவன் நயன்தாரா காதலுக்கு ஏற்பட்டதற்கு காரணமே நான் தான் விக்னேஷ் அவனிடம் சென்று நீங்கள் பார்ப்பதற்கு ஒரு சயலாக பிரபுதேவா போலவே இருக்கிறீர்கள் என்று சொல்வேன். நயன்தாராவிடம் சென்று அவர் என்ன பிரபுதேவா மாதிரி இருக்கிறார் என்று பேசுவேன். இவர் இருவரும் சூட்டிங்கள் இவர் நடிகை அவர் டைரக்டர் என்றார் போல் தான் இருப்பார்கள் அதன்பிறகு அவர்களுக்கு காதல் வளர்ந்து கல்யாணம் செய்து இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் நினைப்பேன் என்று ராகுல் தாத்தாகூறியுள்ளர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full