பறை இசைக்கு பேரறிவாளனுடன் செம்ம குத்தாட்டம் போட்ட சத்யராஜ் – வைரலாகும் வீடியோ.

0
443
sathyaraj
- Advertisement -

பேரறிவாளன் உடன் சத்யராஜ் செம குத்தாட்டம் போட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர் பேரறிவாளன். இவருக்கு முதலில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு 31 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் விடுதலையாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

அண்மையில் தான் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருந்தனர். அதோடு இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று இருக்கின்றனர். ஜோலார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடி இருந்தார் பேரறிவாளன். பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்திருந்தார்.

- Advertisement -

விடுதலையான பேரறிவாளன்:

மேலும், 31 ஆண்டுகாலம் தன் மகனின் விடுதலைக்காக போராடி இருந்தவர் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள். இது தொடர்பாக விடுதலைக்கு பின் வெளியில் வந்த பேரறிவாளன் பேட்டியில், நல்லவர்கள் வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டமல்ல. சிறை வாழ்க்கையின் போது தமிழர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தி இருந்தார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். முப்பது ஆண்டுகாலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

தாய்-தந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடிய பேரறிவாளன்:

தற்போது பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள தன்னுடைய அப்பா அம்மாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பேரறிவாளன் தன்னுடைய அப்பா அம்மாவிற்கு பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார். திருப்பூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்த்தசாரதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தன்னுடைய தாய் மற்றும் தந்தை குயில் 80, அற்புதம் 75 என்ற தலைப்பில் இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் விழா கொண்டாடி இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறந்த நாள் விழா கொண்டாட்டம்:

500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, நடிகர் சதயராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர். மேலும், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் அவருடைய தாயார் அற்புதம்மாள் இடம் ஆசிபெற்றனர். மேடையில் கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் இதில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் குயில் 80, அற்புதம் 75 என்ற தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டிருந்தனர்.

வைரலாகும் சத்யராஜ் குத்தாட்டம் வீடியோ:

இந்த பிறந்தநாள் விழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாக அலங்காநல்லூர் சமர் பறை இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரறிவாளன் குழுவினருடன் ஆட்டம் போட்டு இருக்கிறார். பின் நடிகர் சத்யராஜ்- பேரறிவாளன் மேடையில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் மற்றொரு தரப்பினர் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சத்யராஜுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement