பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சற்று பிரபலமடந்தார். பிக் ஆஸ் வீட்டில் இருக்கும் போது இவர் கொடுக்கும் பேஸ் எக்ஸ்பிரசனுக்காக கலாய்க்கப்பட்டவர், தற்போது அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஸ் கல்யாண் உடன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஹரிஸ் கல்யாண் இதற்கு முன் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரைசாவிற்கு இது முதல் படமாகும். இந்த ஜோடி நடிக்கும் படத்தை இயக்குனர் இலன் இயக்கவுள்ளார்.
இதையும் படிக்கலாமே:
விஷால், அரசுக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கி எவ்வளவு தெரியுமா??
படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். படத்திற்கான பட பிடிப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




