தாலி கட்டிய ராஜ் வெற்றி, ஆனந்த கண்ணீர் வடித்த தீபிகா – வெளியானது கனா காணும் சீரியல் பிரபலங்களின் திருமண வீடியோ

0
2756
- Advertisement -

கனா காணும் காலங்கள் சீரியல் பிரபலங்களான ராஜ் வெற்றி பிரபு மற்றும் தீபிகாவின் திருமண வீடியோ தற்போது வைரலாக வரை வருகிறது. சினிமாவை போல சின்னத்திரையிலும் பல காதல் கல்யாணங்கள் நடைபெற்று தான் வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடித்த பல பிரபலங்கள் ரியல் ஜோடியாக மாறி இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் அடுத்தபடியாக சேர்ந்து இருக்கின்றனர் இளம் காதல் ஜோடியான ராஜ் வெற்றி மற்றும் தீபிகா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அதில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர்.அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இதில் டிக் டாக் மூலம் பிரபலமான பிரபலங்கள் சிலருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் டிக் டாக் பிரபலம் தீபிகா நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவர் டிக் டாக் வீடியோ மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நபர். இவர் போடும் வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதன் மூலம் தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம்.

இவரை போலவே டிக் டாக் மூலம் பிரபலமாகி இதே தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகனவர் தான் ராஜ் வெற்றி பிரபு. இந்த நிலையில் இந்த தொடரில் நடிக்கும் தீபிகா தன்னை ஒருவர ப்ரொபோஸ் செய்ததாக கடந்த மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த நபர் ராஜ் வெற்றி என்று அறிவித்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

தொடர்ந்து நான்கு நாட்களாக வெவ்வேறு கான்செப்ட்களில் திருமண வரவேற்பு நிகழ்வுகள் நடந்தன. நேற்றைய ரிசப்ஷனில் இருவரும் கருப்பு உடை அணிந்திருந்தனர். `என் தீபிகாவின் ரன்வீர்!’ என்கிற கேப்ஷனுடன் ரிசப்ஷனில் எடுத்துக் கொண்ட வீடியோக்களை தீபிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இவர்களின் திருமண வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் ராஜ் வெற்றி தாலி கட்ட மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார் தீபிகா

Advertisement