ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் லிப் லாக் புகைப்படங்கள் படு வைரல் – அட, இந்த நடிகையா ?

0
306
niharika
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் லீப்லாக் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த மத்தியில் விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும், ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார். இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல்:

சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். சந்தியாவை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று சரவணன் போராடி வருகிறார். இந்த சுழலில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். இருந்தாலும் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், ஆல்யா குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார். மேலும், இவரை சந்தியாவாக மக்கள் ஏற்று கொண்டனர்.

ராஜா ராணி 2 சீரியல் கதை:

தற்போது சீரியலில் பார்வதியை ரவுடி கும்பல் ஒன்று கடத்துகிறது. பார்வதியை காணாமல் வீட்டில் உள்ள எல்லோருமே பதட்டத்தில் அழுது புலம்பி தேடிக் கொண்டிருக்கின்றார்கள். பார்வதியை சந்தியா காப்பாற்றுவாரா? ரவுடி கும்பல் சந்தியாவிடம் மாற்றிக்கொள்ளுமா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் லீப்லாக் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

-விளம்பரம்-

நடிகை நிஹாரிகா கணவர்:

ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயினி சந்தியாவின் அன்னி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நிகாரிகா. இவர் இந்த சீரியல் மட்டுமில்லாமல் வேலைக்காரன், வித்யா நம்பர்-1 போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் டான்சரும் ஆவார். இந்நிலையில் இன்று நடிகை நிஹாரிகாவின் பிறந்தநாள். இவருடைய பிறந்தநாளுக்கு ஸ்பெஷலான வாழ்த்தை அவருடைய கணவர் செய்திருக்கிறார். இவருடைய கணவர் பெயர் இயக்குனர் ரஞ்சித். அது என்னவென்றால், தங்களின் லிப்-லாக் புகைப்படத்தை எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

பிறந்த நாள் குறித்து கூறி இருப்பது:

இவர் பதிவில் கூறி இருப்பது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய ஒரே காதலியே. இது நாம் சேர்ந்து கொண்டாடும் ஐந்தாவது பிறந்தநாள். இது மட்டுமில்லாமல் தொடர்ந்து நாம் சேர்ந்தே இருப்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இதுதான் சோசியல் மீடியாவில் தீயாய் பற்றிக்கொண்டு எரிகிறது. அதோடு வருடம் வருடம் வரும் பிறந்த நாள்களில் இதேபோன்று தான் இருவரும் ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கிறார்கள். இது இவர்களுடைய சகஜமான ஒன்றாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement