வெளியானது ராஜா ராணி 2 வின் ப்ரோமோ – சஞ்சீவிற்கு பதிலாக இந்த நடிகர்.

0
2051
rajarani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடிகள் நிஜ வாழ்விலும் காதலித்து வந்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

- Advertisement -

சமீபத்தில் தான் ஆல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு சஞ்சீவ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்துவருகிறார். ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டு வந்தது இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த தொடர் ராஜா ராணி தொடருக்கு முற்றிலும் வித்யாசமாக இருக்கிறது. ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவிற்கு பதிலாக இந்த தொடரில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலில் நடித்து வரும் சித்து நடித்து உள்ளார். இவர்களின் கெமிஸ்ட்ரி சஞ்சீவ் மற்றும் ஆல்யா அளவிற்கு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்

-விளம்பரம்-
Advertisement