கர்ப்பமாக இருக்கும் போது இப்படி ஒரு காட்சி தேவையா - ராஜா ராணி இயக்குனரை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள், பல குடும்பங்களின் மனதில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ராஜா ரணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது.

https://twitter.com/cjsaysanynez/status/1468334098003283976

அண்ணன், தம்பி, மாமியார், மருமகள் ஒற்றுமை மற்றும் ஒரு பெண்ணின் கனவை நினைவாக்க பாடுபடும் கணவனின் கதை. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார். தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது.

இதையும் பாருங்க : 'Memesஸை எல்லாம் என் நண்பர்கள் எனக்கு அனுப்பிச்ச அப்போ ' - மன வேதனையுடன் அஸ்வின் கொடுத்த விளக்கம்.

இந்நிலையில் இந்த சீரியலில் சில எபிசோடுகள் ஆகவே ரொமான்ஸ் காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. அதிலும் சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசா சீத்துக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் வந்திருந்தது. இதனால் அந்த காட்சி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆல்யா மானஸா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் ஆல்யாவை சித்து தூக்குவது போல காட்சி இடம்பெற்று இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கும் வேளையில் இப்படி ஒரு காட்சி அவசியம் தானா என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full