‘Memes’ஸை எல்லாம் என் நண்பர்கள் எனக்கு அனுப்பிச்ச அப்போ ‘ – மன வேதனையுடன் அஸ்வின் கொடுத்த விளக்கம்.

0
699
aswin
- Advertisement -

விஜய் டிவி ‘குக்கூ வித் கோமாளி’ 2 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். ஏற்கனவே இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்து உள்ளார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து இருக்கிறார். இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தும் தொடர்ந்து இவர் ஆல்பம் சாங், வெப் சீரிஸ் என்று நடித்து வருகிறார். மேலும், தற்போது அஸ்வின் அவர்கள் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-73-1024x758.jpg

டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். அதோடு குக் வித் கோமாளி புகழின் காமெடியும், அஸ்வினின் காதல் காட்சிகளும் ட்ரெய்லரில் அட்டகாசமாக வந்திருக்கிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடந்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஆடியோ ரிலீஸின் போது அஸ்வின் பேசிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதில் அஸ்வின் 40 கதை கேட்டு தூங்குகிட்டேன். ஆனால், நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் படம் மட்டும் தான் என்று பேசி இருந்தார். இதை மட்டும் கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களில் அஸ்வினுக்கு எதிராக மீம்ஸ்களை அள்ளி வீசிக் கொண்டு வருகின்றார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இதுகுறித்து அஸ்வின் கூறியிருப்பது, நான் விழாவில் பேசினது சீரிசாகவா இருந்தது? ஆடியோ ரிலீஸின் போது என்ன பேசுவதென்று தெரியாமல் ரொம்ப சந்தோசத்தில் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல விஷயம் நடக்குது என்ற பதட்டத்திலும், மேடை பயத்திலும், கையெல்லாம் நடுக்கத்தோடு தான் நின்று கொண்டிருந்தேன். அப்படி ஒரு சூழலில் எப்படி என்னால் ஆவணமாகவும்? திமிராகவும்? பேச முடியும். நான் யோசித்து யோசித்து பேச கூடிய ஆள் கிடையாது. எப்பவும் போல் விளையாட்டுத்தனமாக தான் நான் பேசினேன். அப்படித்தான் ஹரி படம் நல்லா இல்லை என்றால் ரிலீஸ் பண்ண விடமாட்டேன் என்று சும்மா நானும் இயக்குனரும் ஜாலியாக பேசிட்டு இருந்தோம்.

This image has an empty alt attribute; its file name is 1-74-1024x516.jpg

மேலும், என்ன சொல்ல போகிறாய் ஒரு நல்ல கதை. மக்களுக்கு நல்ல படம் கொடுக்கிறோம் என்று சொல்ல வந்த வார்த்தையை தான் மேடையில் நான் ரிலீஸ் பண்ண விடமாட்டேன் என்று விளையாட்டுத்தனமாக சொன்னேன். இதை சரியாக தொடர்புபடுத்தி பேசாததால் என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல் ஒரு நல்ல படம் பண்ணனும். அஸ்வின் படம் என்று எல்லோரும் சொல்லணும். அதுக்கேத்த மாதிரி தான் நான் கதையை தேர்வு செய்தேன். அதனால் கதை பிடிக்கவில்லை, தூங்கிட்டேன் என்று அர்த்தமில்லை. 40 கதைகளைக் கேட்டு தூங்கிருக்கிறேன் என்று நான் ஜாலியாக தான் பேசினேன். உண்மையாலுமே நான் கேட்ட கதைகளுக்கு கணக்கே கிடையாது. இதுவரை எத்தனை கதை கேட்டேன் என்று எனக்கே தெரியாது.

-விளம்பரம்-

மேடையில் இருக்கும் போது ஒரு குத்துமதிப்பாக வாயில் வந்ததை அந்த டைமில் சொன்னேன். இதற்கு திமிரா சொன்ன மாதிரி எடுத்துக் கொண்டார்கள். என் படம் தாண்டா மாஸ் மத்த படம் எல்லாம் தூசு என்றெல்லாம் நான் எப்போதும் பேசியது கிடையாது. என் படம் நல்ல கதை. உங்களுக்கு பிடிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தான் நான் அப்படி சொன்னேன். எதார்த்தமா சொன்னது யாரையும் புண்படுத்துகிற நோக்கில் சொல்லவில்லை. எனக்கு என்ன சொல்ல போகிறாய் கதை அவ்வளவு பிடித்திருந்தது. 3 மணி நேரம் போர் அடிக்காமல் கதை கேட்டேன். அதை தான் நான் சொல்ல வந்தேன். அதோடு என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்லிவிட்டு தான் மேடையில் இருந்து இறங்கினேன். முழு வீடியோவையும் பார்த்தால் நான் மன்னிப்பு கேட்டது இருக்கும்.

aswin

அதை எல்லாம் விட்டு குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் சர்ச்சை செய்வது என்னுடைய கேட்ட நேரமாகத் தான் நான் நினைக்கிறேன். தவறாக நினைப்பவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. மேலும், சினிமாவில் இன்னும் என்னால் சாதிக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது நான் எப்படி ஆணவத்தில் பேசி இருப்பேன்? சாதித்தாலும் எப்போது எனக்கு ஆணவம் வராது. இந்த மாதிரி மீம்ஸ்கள் எல்லாம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. உண்மையிலேயே நான் அந்த அர்த்தத்தில் பேசியிருந்தால் வருத்தப்படுவேன். நான் சொன்னதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று தான் நான் வருத்தப்படுகிறேன்.

என்னைவிட இந்த படத்திற்காக இயக்குனர் உட்பட அனைவரும் அதிகமாக உழைப்பை போட்டிருக்கிறார்கள். இத்தனை பேரின் வாழ்க்கையும் என் ஒருவனால் வீணாகக் கூடாது என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருக்கின்றது. என்னுடைய தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் செலவு செய்து உள்ளார். அவருக்கு எந்த கஷ்டமும் மன உளைச்சலும் வரக்கூடாது என்று கடவுளை நம்புகிறேன். நான் ஆணவம் பிடித்தவன் கிடையாது என்று மக்கள் புரிஞ்சிக்கிட்டா போதும் என்ற உணர்வு பூர்வமாகப் பேசி இருக்கிறார்.

Advertisement